Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரொனால்டோ அபாரம்: யூரோ இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது போர்ச்சுகல்!

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்துக்கு போர்ச்சுகல் அணி முன்னேறியுள்ளது.ரொனால்டோவும் நானியும் போர்ச்சுகல் அணிக்கான கோல்களை அடித்தனர்.

ஐரோப்பிய கோப்பை தொடர்ன் முதல் அரையிறுதி  ஆட்டம் நேற்று லியோன் நகரில்  நடந்தது. இதில்  போர்ச்சுகல் அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 50 வது நிமிடத்தில் ரொனால்டோ தலையால் முட்டி போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து நானி 53வது நிமிடத்தில் 2வது கோலை அடிக்க வேல்ஸ் அணியால் இறுதி வரை கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.



 

ஐரோப்பிய கோப்பையில் இன்று  நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகச்சாம்பியன் ஜெர்மனியை போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி ஸ்டேட் டி பிரான்சில் எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. சோனி ஈஎஸ்பின் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ