Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கு: பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் தென்ஆப்ரிக்கத் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

          

பிரபல தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தென்ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா நகரில் காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிஸ்டோரியஸ் மீது பிரிட்டோரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையில், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிவிட்டதாக நினைத்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் ரீவா சிக்கிக் கொண்டதாகவும் பிஸ்டோரியஸ் தெரிவித்தார். மேலும் தனது காதலியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி பிஸ்டோரியசுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் தென்ஆப்ரிக்காவில் வகுக்கப்பட்டுள்ள, புதிய சட்டத் திட்டங்களின்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பபட்டது. இப்போது அதே நீதிபதியே  பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்துள்ளார். அரசு தரப்பு 15 ஆண்டுfகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது. .

தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதில்லை என ஆஸ்கர் பிஸ்டோரியசின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் செயற்கை காலுடன் பிஸ்டோரியஸ் ஓடி உலகம் முழுக்க பாப்புலரானார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ