Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விம்பிள்டனில் சாம்பியன் : ஸ்டெஃபியின் சாதனையை சமன் செய்தார் செரீனா

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இத்துடன் 22வது கிராண்ட் ஸ்லாமை கைப்பறியுள்ள செரீனா, ஜெர்மனி முன்னாள் வீராங்கனை  ஸ்டெஃபியின் சாதனையை சமன் செய்துள்ளார். 

லண்டனில் நேற்று நடந்த  ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையுமான  செரீனா வில்லியம்ஸ்,  ஜெர்மனியின் ஏஞ்சலி கெர்பரை எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் 5–5 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. 11–வது கேமில் கெர்பரின் சர்வீசை முறியடித்த செரீனா அதன் பின்னர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். 2–வது செட்டிலும் கெர்பர் ஓரளவு நெருக்கடி அளித்தாலும், அனுபவம் வாய்ந்த செரீனாவின் ஆட்டத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 21 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 7–5, 6–3 என்ற நேர்செட்டில் ஏஞ்சலி கெர்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் அத்துடன்விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் 7 வது முறையான செரீனா பட்டம் வென்றார். செரீனாவுக்கு ரூ.18½  கோடியும் கெர்பருக்கு 9¼  கோடியும் பரிசாக கிட்டியது. 

அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில், தற்போது செரீனாவும் ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெஃபி கிராப்பும் தலா 22 பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் 24 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close