Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோ இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி ரொனால்டோ கோப்பையை வெல்வாரா?

பாரீஸ் என்ற சொல்லை சொல்லி முடிப்பதற்கு முன்பே நம் ஸ்மால் பிரெய்னில் ஸ்பார்க் ஆகும் விஷயம் ஈபிள் டவர்.  உலக அதிசயமான ஈபிள் கோபுரம் பிரான்சிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிற்கே அதுதான் அடையாளம். பிரான்சின் நடந்துவரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய திருவிழாவான யூரோ 2016 கால்பந்து தொடரால் தினமும் வண்ணங்கள் மாறி மாறி இப்போத மனசை மெர்சலுமாக்குகிறது.

ஆம்... ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் அணியின் தேசியக் கொடியின் வர்ணங்கள் ஈபிள் டவரில் ஜொலித்துக்கொண்டிருந்தன. இன்று நள்ளிரவு நடக்கும் இறுதிப் போட்டிக்குப் பின்னர் அந்த உலக சின்னத்தை ஆக்கிரமிக்கபோவது எந்த தேசத்தின் கொடி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். ஐரோப்பிய கோப்பையின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

சொந்த மண்ணில், சொந்த மக்களுக்கு மத்தியில் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் விளையாடும் பிரான்ஸ் அணி வெல்வதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை. தீவிரவாதத்தின் மொத்த அச்சுறுத்தல்களையும் மீறி மொத்த பிரஷரையும்  தாண்டி, உலக சாம்பியன் ஜெர்மனியையும் வீழ்த்தி ஈபிள் டவரின் டாப்பில் அமர்ந்திருக்கிறது பிரான்ஸ் அணி. போக்பா என்னும் இளம் நம்பிக்கை நட்சத்திரத்தை நம்பிக் களமிறங்கிய அணிக்கு பயட், கிரீஸ்மேன் என்னும் ரூபத்தில் இரு நாயகர்கள் முளைக்க ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் அசாத்தியமாக பைனலுக்குள் நுழைந்துள்ளனர்.

பிளாக்மெயில் புகாரால் முன்னனி ஃபார்வேர்டு பென்சிமா நீக்கப்பட, ஊக்கமருந்து சர்ச்சையால் சகோ தடை பெற மனரீதியான  பிரச்சனைகளைத் தாண்டியே களம் கண்டது பிரான்ஸ் அணி. சாக்னா, எவ்ரா போன்ற அதிக வயது கொண்ட வீரர்களாக இருந்தனர். கோல் போஸ்டை கேப்டன் லோரிஸ், தனி ஒருவனாய் பாதுகாத்தார். இந்தத் தொடரில் இதுவரை 6 கோல்கள் அடித்து அசத்திய கிரீஸ்மேனின் எழுச்சி ‘கடைசி கட்டத்தில் ஜெயிப்பவர்கள்’ என்று பிரான்ஸ் மீது படிந்திருந்த கறையைத் துடைத்து எறிந்தது. 4 கோல்கள் அடித்துள்ள ஆலிவியர் ஜிரௌடும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். கிரீஸ்மேன் – ஜிரௌட் – பயட் மூன்று சிங்கங்கள்தான் பிரான்ஸ் அணியின் துருப்புச்சீட்டு.
 

அதேசமயம் போர்ச்சுகல் பைனல் வரை முன்னேறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகளின் லீக் சுற்று சொதப்பலால் போர்ச்சுகல் அணியின் நாக் அவுட் போட்டிகள் அளிதாக அமைந்துவிட்டன. கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் ஒன்மேன் ஆர்மியை நம்பிக் களமிறங்கும் அணியாகத்தான் எல்லோரும் போர்ச்சுகலைப் பார்த்தனர்.

ஆனால் நானி, ரெனாடோ சான்சஸ் ஆகியோரும் கைகொடுக்க திக்கித் திணறி கடைசிப் படியில் வந்து நிற்கிறது போர்ச்சுகல். அரையிறுதியில் கோல் அடித்து ரொனால்டோவும் பார்முக்கு திரும்பியுள்ளார். ஆனால் தேசிய அணிக்காக ரொனால்டோ ஒரு கோப்பை கூட வென்றதில்லை. தன்னுடைய நீண்ட நாள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள ரொனால்டோவிற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்.

ஏன் கடைசி சந்தர்ப்பமாகக் கூட இருக்கலாம். அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வாரா? ஒரு டீமாக டெவலப்மென்ட் அடைந்துள்ள போர்ச்சுகல் அணி கண்டிப்பாக பிரான்சிற்கு சவால் விடும்.

இது வெறும் இரண்டு நாடுகளுக்கு மட்டும் நடக்கும் போட்டியல்ல. தன்மானத்திற்கு எதிரான போட்டி. சொந்த ஊரில் மானம் காக்க பிரான்சும், தங்கள் கேப்டன் மீதான உலகின் தூற்றலைத் துடைக்கப் போர்ச்சுகல் அணியும் நிச்சயம் போராடும். நள்ளிரவு முடிவு தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம் ஐரோப்பாவின் கிங் யாரென்று?

-மு.பிரதீப் கிருஷ்ணா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ