Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடகள வீராங்கனை டூட்டி சந்துக்கு கார் பரிசு

லிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தகுதிப் பெற்றுள்ள இந்திய தடகள வீராங்கனை  டூட்டீ சந்துக்கு, கார் பரிசாக வழங்குவதாக மகிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறியதையடுத்து டூட்டீ சந்த் அளித்த பேட்டியில் ,'' கார் வாங்குவது எனது விருப்பம். போதுமான பணம் சேர்ந்ததும் ஒரு கார் வாங்குவேன். என்னால் பென்ஸ்  அல்லது பிம்டபிள்யூ வாங்க முடியாது. எனக்கு  மகிந்த்ரா ஜீப் கூட பிடிக்கும். அதையாவது வாங்குவேன் ''என கூறியிருந்தார்.

டூட்டீயின் விருப்பத்தை கேள்விபட்ட மகிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா, டூட்டீ சந்துக்கு மகிந்த்ரா  எஸ்யுவி 500 கார் வழங்க முன்வந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் ஆனந்த் மகிந்த்ரா, ''எனது கவனத்துக்கு டூட்டி சந்தின் விருப்பத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டி முடிந்ததும் எனது தனிப்பட்ட பரிசாக, மகிந்த்ரா எஸ்யுவி 500 காரை அவருக்குப்  பரிசாக வழங்குவேன்'' என அறிவித்துள்ள்ர்.

கடந்த 1980 ம் ஆண்டு, மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீராங்கனை டூட்டீ சந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close