Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் 'மந்திரகால் ' ரொனால்டினோ: பிரீமியர் புட்சால் நாளை தொடக்கம்!

பிரீமியர் லீக் புட்சால் கால்பந்து தொடர் சென்னையில் நாளை (ஜூலை 15-ம் தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி மும்பையை எதிர்த்து விளையாடுகிறது. மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டினோவின் கோவா அணி கொல்கத்தாவை எதிர் கொள்கிறது.

இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் இந்த தொடரில்,சென்னை, கோவா, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, கொச்சி என 6 அணிகள் பங்கேற்கின்றன. உலகின் முன்னணி 6 மார்க்கி வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

5 வீரர்கள் மட்டுமே களத்தில் உள்ள இந்த வகை கால்பந்து தொடரில், சென்னை அணிக்கு பிரேசில் வீரர்  ஃபால்கோ மார்க்கி வீரர். கோவா அணிக்கு பிரேசில் ஜம்பவான் ரொனால்டினோ, கொல்கத்தா அணிக்கு அர்ஜென்டினா முன்னாள் சூப்பர் ஸ்டார் ஹெர்னான் கிரேஸ்போ, கொச்சி அணிக்கு ஸ்பெயின் முன்னாள் வீரர் சல்காடோ, மும்பை அணிக்கு மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் கேப்டன் ரேயான்  கிக்ஸ் பெங்களுரு அணிக்கு மான்செஸ்டர் யுனைடெட் ஜம்பவான் பால் ஸ்கோல்ஸ் ஆகியோர்  மார்க்கி வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

போர்ச்சுகல் ஜாம்பவான் டெக்கோ காயம் காரணமாக கடைசி நிமிடத்தில் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சென்னை அணியை ஹிந்து குழுமம் வாங்கியுள்ளது. மும்பை அணி டி.சி. டிசைனுக்கு செந்தமானது. கொல்கத்தா அணியை கிராஸ்ரூட் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. நடிகர் புனித்குமார் பெங்களூரு அணியையும் ஈஎஸ் என்டர்டெயின்ட்மன்ட் நிறுவனம் கொச்சி அணியையும் கோவா அணியை வைகிங் மீடியா நிறுவனமும் வாங்கியுள்ளன.

பிரிமீயர் புட்சாலில்' ஏ 'பிரிவில் சென்னை , மும்பை, கொச்சி அணிகளும் 'பி 'பிரிவில் கொல்கத்தா, பெங்களூரு, கோவா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சென்னை நேரு உள்ளரங்க மைதானத்தில் நாளை இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை  அணி மும்பை அணியை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் கோவா அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

நாளை மறுநாள் (ஜூலை 16-ம் தேதி ) மும்பை -கொச்சி, கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஜூலை 17-ம் தேதி கொச்சி -சென்னை பெங்களூரு- கோவாஅணிகள்  சந்திக்கின்றன  அரையிறுதி ஆட்டங்கள் கோவாவில் நடைபெறுகின்றன.  ஜூலை 24-ம் தேதி   கோவாவில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

புட்சால் என்றால் என்ன?

ஒரு அணியில் 5 வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார். எத்தனை மாற்று ஆட்டக்காரரை வேண்டுமானாலும் களம் இறக்கிக் கொள்ளலாம்.ஆனால் களத்தில் 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.

இன்டோர் மைதானத்தில் போட்டி நடைபெறும். கோல்போஸ்ட் வழக்கத்தை விட சிறிய அளவில்  இருக்கும்.

முதல் பாதி 20 நிமிடம் அடுத்த பாதி 20 நிமிடம் என மொத்தம் 40 நிமிடங்கள்.

ஒவ்வொரு பாதியிலும் இரு அணிகளுக்கும் ஒரு டைம்அவுட் வழங்கப்படும்.

ஆப்சைடு கிடையாது,. பேக் பாஸ் ஒரு முறைதான் செய்ய வேண்டும்.

சிவப்பு அட்டை வழங்கப்பட்டால் 2 நிமிடம் கழித்து இன்னோர் ஆட்டக்காரரை இறக்கிக் கொள்ளலாம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ