Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரியோ ஒலிம்பிக்: 42 வயது ' நாட் அவுட் '

30 வயதைத் தொட்டுவிட்டாலே, 'போதும் இனி விளையாட்டு' என ஒதுங்கிக்கொள்வோம் நாம். பிரிட்டனில் 42 வயதிலும்  தடகள வீராங்கனை ஒருவர் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார். நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் ஓடப் போகிறார் என்பதுதான் ஆச்சர்யத் தகவல். ஜோ பாவே என்ற அந்த சாதனை வீராங்கனை, ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது இது 5வது முறை. ஜோ பாவேதான்  5 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே பிரிட்டன் வீராங்கனை என்பதும் குறிப்பிடவேண்டிய தகவல்.

கடந்த 1997 ம் ஆண்டு சர்வதேச தடகளத்தில் களம் புகுந்த ஜோ பாவே, 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் முதன் முறையாக பங்கேற்றார். தொடர்ந்து ஏதென்ஸ், பெய்ஜிங், லண்டன் என களமிறங்கி இப்போது ரியோவுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ஒலிம்பிக்கில் தன்னைவிட வயதில் பாதி குறைந்த வீராங்கனைகளுடன் பாவே போட்டியிடுகிறார்.

இந்த வயதிலும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து ஜோ பாவே கூறுகையில், '' இப்போதே எனது டீம்மேட்டுகள் என்னை பாட்டி என்றுதான் அழைக்கின்றனர். லண்டன் ஒலிம்பிக்குடன் முடித்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்குள் இப்போது அடுத்த ஒலிம்பிக வந்துவிட்டது. வயதை பற்றியெல்லாம் நான் யோசித்துக் கூட  பார்க்கவில்லை. என்னைப்போல ஒருவர் தடகள வாழ்க்கையை முழுமையான அனுபவித்தது கிடையாது. நான் ஓடக் கிளம்பினால் எனது கணவர் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார். எனக்காக எனது கணவர், குழந்தைகளும் கூட  மைதானத்திலேயே கிடக்கின்றனர். என் வெற்றிகளில் அவர்களுக்கும் பங்கு உண்டு.

ஒலிம்பிக் ட்ரையல்களில் பங்கேற்பதற்கு இரு வாரங்களுக்கு முன் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. தேர்வுக்குழுவிடம் கூறி விட்டு விலகி விடலாமா என்றுகூடத் தோன்றியது. ஆனால் ஒலிம்பிக் வாய்ப்பை இழக்க யாருக்குதான் மனசு  வரும். பங்கேற்க வேண்டுமென்ற வெறி மனதில் ஏற்பட்டது. எனக்குள் புதுத்தெம்பு எழுந்தது. ஸ்பிரிட்டுடன் பயிற்சியில் ஈடுபட்டேன்.தற்போது ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று விட்டேன் '' என்கிறார் பெருமிதமான குரலில்.

ஜோ பாவே, இதற்கு முன் மெல்பர்ன் காமன்வெல்த் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் அடுத்து கிளாஸ்கோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார். கடந்த 2014ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஜுரிச்சில் நடந்தது. இதில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஜோ பாவே தங்கம் வென்றார். இதற்கு முன் 4 ஒலிம்பிக் போட்டிகளில் ஜோ பாவே  பங்கேற்றிருந்தாலும் இதுவரை பதக்கம் வென்றதில்லை. கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 5வது இடம் பிடித்ததே அவரது சிறந்த ஓட்டம்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், அதிக வயதில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை ஜோ பெறுவார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close