Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியோ ஒலிம்பிக்:இந்திய குழுவினருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் 'எனர்ஜி ' பதிவு !

ஸ்கர் விருதையோ கிராமி விருதையோ வெல்வேன் என்று நான் நினைத்ததில்லை. உள்ளார்ந்த ஈடுபாடு, என்னை அந்த விருதுகள் வரை கொண்டு சென்றுள்ளது என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

மேலும் அவர், இந்திய விளையாட்டு வீரர்களும் அத்தகைய ஈடுபாட்டுடன் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில்  ”ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு” என்ற தலைப்பில் அவர், வெளியிட்டுள்ள பதிவின் முழு விபரம்:

”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர்  இல்லாமல் தடுமாறி வருகின்றன.  அந்த வகையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  நாட்டை வழிநடத்த வலுவான  தலைவர்கள் கிடைத்துள்ளனர். ஒன்றுபட்டு,  சக்தியை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இதுவே தக்க சமயம். நாட்டை வழிநடத்த தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் தலைவர் நமக்கு கிடைத்திருப்பது இந்தியாவின் நற்பேறு. நமது மக்கள் தொகையில்  60 விழுக்காட்டினர் இளைஞர்கள். அத்தகைய ஒரு இளமையான மக்களைக் கொண்ட ஒரு நாடு இது. தற்போது இளைஞர்கள் உலக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுவது  குறித்து மிக்க மகிழ்ச்சி. தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வு திட்டம் சரியான திசையை நோக்கி பயணிக்கிறது.

ஒரு விஷயம் மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவும் சாத்தியமே.  உறுதியாக, விடாப்பிடியாக முயற்சித்தலே அவசியமான குணம் ஆகும்.  சிறிய விஷயங்களுக்காக உங்கள் மனதைப் பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டாம். சில சோதனைகளை நீங்கள் எதிர் கொள்ளலாம். அவை உங்களுக்குள் ஏற்படக் கூடியவை. அவற்றில் இருந்து மீண்டு வாருங்கள்.

இந்தியர்கள் ஆஸ்கர் விருதையோ, கிராமி விருதையோ வெல்வது  சாத்தியமற்றது என ஒரு காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உள்ளார்ந்த ஈடுபாடு மற்றும் மிகச் சிறந்த தரத்தினால் அவற்றையும் வெல்ல முடிந்திருக்கிறது. நமது திறமையை  நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் நேரம் இது. இப்போது நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கடவுளின் அருளாளும், இந்திய மக்களின் வேண்டுதல்கள் மற்றும் அன்பாலும், எப்படி சாதிப்பது என்று உலகிற்கு நாம் காட்டுவோம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ