Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாகித் மரணம்!

மாஸ்கோ ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகித்,  உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். 

கிட்னி மற்றும் கல்லீரல் பிரச்னை அவருக்கு இருந்து வந்தது. இதனால் கிர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் முகமது ஷாகித் மரணமடைந்தார். மரணமடைந்த ஷாகித்தின் உடல்,  அவரது சொந்த ஊரான வாரணாசிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

முகமது ஷாகித்தின் மருத்துவச் செலவுக்காக,  இந்திய விளையாட்டு அமைச்சகம்  ரூ.10 லட்சம் வழங்கியிருந்தது. மரணமடைந்த முகமது ஷாகித்துக்கு பர்வீனா என்ற மனைவியும்,  ஹீனா, சையீஃப் என இரு குழந்தைகளும் உண்டு.

கடந்த 1980 ம் ஆண்டு,  இந்திய ஹாக்கி அணி மாஸ்கோ ஒலிம்பிக்கில் கடைசியாக தங்கம் வென்றிருந்தது. அந்தக் குழுவில் முகமது ஷாகித் இளம் முன்கள ஆட்டக்காரராக இடம் பெற்றிருந்தார். மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல, முகமது ஷாகித்தின் அற்புதமான ஆட்டமும்  ஒரு காரணமாக அமைந்தது. கடந்த 1982 ம் ஆண்டு,  டெல்லி ஆசியப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும்,  அடுத்து நடந்த சியோல் ஆசியப் போட்டியில்  வெண்கலம் வென்ற  இந்திய அணியிலும் ஷாகித் இடம் பெற்றிருந்தார்.  மறைந்த முகமது ஷாகித்துக்கு, மத்திய அரசு அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

'' களத்தில் ஷாகித் செயல்படும் விதத்தை யூகித்துக் கொள்ளவே  முடியாது. தடுப்பாட்டக்காரர்களை அத்தனை அழகாக ஏமாற்றி பந்தை கடத்திச் செல்வார். எல்லா ஹாக்கி வீரர்களுக்கும் அத்தகைய ஒரு திறமை அமைந்து விடாது''  என 1980 ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஷாகித்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முகமது ஷாகித் சாதனைகள்

1980 - ஒலிம்பிக் தங்கம்

1980 - சாம்பியன்ஸ் டிராபி சிறந்த முன்கள வீரர்

1886 - ஆசிய ஆல் ஸ்டார்ஸ் பட்டியலில் இடம்

முகமது ஷாகித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார், அதில், ''முடிந்தவரை  காப்பாற்ற முயற்சித்தோம்.  மருந்துகளும் பிரார்த்தனைகளும் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. அவரது ஆத்மா சாந்தி  அடையட்டும்'' என தெரிவித்துள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ