Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியன் சூப்பர் லீக்: சென்னை அணியில் இரு தமிழக வீரர்கள்!

ந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி அணியில்,  தமிழக வீரர்கள் இல்லாத குறை இருநதது. தற்போது அதனைத் தீர்க்கும் வகையில், தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் சென்னையின் எப்.சி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் பாணியில்,  இந்தியாவில் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், சென்னையை மையமாகக் கொண்டு, சென்னையின் எப்.சி அணி விளையாடி  வருகிறது. ஆனால் இதுவரை  இந்த அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம் பெறாத வருத்தம், சென்னை அணியின் ரசிகர்களுக்கு இருந்தது. 

அதனைத் தீர்க்கும் வகையில்,  சென்னை அணியில் முதன் முறையாக,  தமிழகத்தை  சேர்ந்த இரு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த இரு சீசன்களில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த மோகன்ராஜின் ஒப்பந்தம் நிறைவடைந்ததையடுத்து,  அவர்  சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச்  சேர்ந்த இவர் , எஸ்டிஏடி மதுரை மையத்தில் பயிற்சி பெற்றார். பின்னர், சென்னை சாய் மையத்திலும் பட்டைத் தீட்டப்பட்டார்.

தொழில்முறை கால்பந்தை பொறுத்த வரை மோகன்ராஜ், இதற்கு முன்னதாக ஹெச்.ஏ.எல். அணிக்காக விளையாடி வந்தார். கொல்கத்தாவின் புகழ்பெற்ற மோகன்பகான் அணிக்காக  5 ஆண்டு காலம் வரை மோகன்ராஜ் விளையாடியுள்ளார். சென்னை அணிக்காக விளையாடுவது குறித்து மோகன்ராஜ்  கூறுகையில்,''தொழில்முறை ஆட்டக்காரராக சொந்த மண்ணுக்காக ஆடும்போது அதனால் கிடைக்கும் சந்தோஷமேத்  தனி. என் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகத்துக்கும் பயிற்சியாளர் மார்கோ மெட்ரசிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

அதுபோல் நடுகள வீரரான தனபால் கணேஷ்,  கடந்த இரு சீசன்களில் புனே அணிக்காக விளையாடி வந்தார். இவரை கடந்த ஆண்டே, சென்னை அணி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் ஈரான் அணிக்கு எதிரான சர்வதேச போட்டியின்போது, கணேஷ் தனபால் காயமடைந்தார். அதனால் கடந்த தொடர் முழுக்க  தனபால் கணேஷ், ஐஎஸ்எல் தொடரில் பஙகேற்கவில்லை. இந்த சீசனில் களமிறங்க தயாராகி வருகிறார்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ