Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..!

லிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சீனக் குழுவில் 416 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு அணியில் இருந்து இவ்வளவு வீரர் -  வீராங்கனைகள் பங்கேற்பது இதுவே முதல் முறை.

கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 46 தங்கப்பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீன அணி 38 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது. இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் சீனா 416 பேர் கொண்ட மிகப் பெரியக் குழுவை அனுப்புகிறது. இதில் 216 வீராங்கனைகளுடன் 160 வீரர்களும் உள்ளனர். மொத்தம் 26 விளையாட்டுப் போட்டிகளில் சீன அணி பங்கேற்கிறது.  லண்டன் ஒலிம்பிக்கில் 396 பேர் சீன அணி தரப்பில் இருந்து பங்கேற்றனர்.

பயிற்சியாளர்கள் , அலுவலர்கள் என கணக்கிட்டால் சீனக் குழுவின் மொத்த எண்ணிக்கை 711 ஆகும். 29 வெளிநாட்டு பயிற்சியாளர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் உலகச் சாம்பியனான ஒரே ஆசிய வீராங்கனை ஜிங் ஸெட்டோ முதலில் சீனக் குழுவில் இடம் பெறவில்லை என சொல்லப்பட்டது. அதிகமான விளம்பரங்களில் அவர் நடித்ததால், குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் பரவியது.  ஆனால் அவரும் தற்போது சீனக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

சீனக் குழுவில் இடம் பெற்றுள்ள இளவயது உறுப்பினர் 14 வயது நீச்சல் வீராங்கனையான ஐ யான்ஹன், இவர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில்  பங்கேற்கிறார். 39 வயது நிரம்பிய சென் யிங், குழுவில் அதிக வயது நிரம்பியவர். ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றுள்ள ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சூ காய், காயம் காரணமாக சீனக் குழுவில் இடம் பெறவில்லை.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close