Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊக்க மருந்து விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய தடகள அணிக்குத் தடை?

க்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய தடகள அணிக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற தகவலால் பரபரப்பு கிளம்பி உள்ளது. ரஷ்ய விளையாட்டு அமைப்பே, வீரர் வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக ரஷ்ய வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் தடை விதித்திருந்தது. புகழ்பெற்ற போல்வால்ட் வீராங்கனை எலீனா இசிபெயன்வா தலைமையில்,  ரஷ்ய வீரர் வீராங்கனைகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் இந்த வழக்கை சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது. 

இதனால்,  ரஷ்ய தடகள  வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்ய தடகள வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டுமென சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தை' வாடா ' என்ற  ஊக்கமருந்து தடுப்புக் கழகமும்,  சில நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே இந்த விவகாரத்தில் வரும் 24 ம் தேதி ஒலிம்பிக் கவுன்சில் இறுதி முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டால், புகழ்பெற்ற பல வீரர் - வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

ரஷ்யாவின் முன்னணி தடகள வீராங்கனை எலீனா இசிபெயன்வா, போல்வால்ட்டில்  2004 ஏதென்ஸ், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலத்தையும் கைப்பற்றியுள்ளார். உயரம் தாண்டுதல் வீராங்கனையான  23 வயது மரியா குச்சினாவையும் ரியோ, மிஸ் செய்யும். இவர் பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு நடந்த உலக தடகளத்தில் தங்கம் வென்று அசத்தியவர். முன்னதாக 2014 ம் ஆண்டு  உள்ளரங்கத் தடகளப் போட்டியிலும் தங்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அசத்தும் செர்ஜி சுபன்கோவும், ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். அண்மையில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சுபன்கோ தங்கம் வென்றவர். ரியோவில் களமிறங்கினால், 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில், நிச்சயம் சுபன்கோவுக்குதான் தங்கம் கிடைக்கும் என்பது விளையாட்டு ரசிகர்களின் கணிப்பு.

உயரம் தாண்டும் வீரர் இவான் உனோவ், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்.  2015 ம் ஆண்டு உள்ளரங்க தடகள விளையாட்டிலும் தங்கம் வென்றவர்.

இத்தனை சாதனை வீரர் வீராங்கனைகளின் ஆட்டங்களை ரியோ சந்திக்குமா, சந்திக்கும் வாய்ப்பை இழக்குமா என்பது ஞாயிறன்று தெரியும்.

உசேன்போல்ட் கருத்து

இந்நிலையில், ஊக்கமருத்து விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தடகள வீரர் உசேன் போல்ட், '' ரியோ ஒவிம்பிக்கில் பங்கேற்க கிட்டத்தட்ட தயாராகி விட்டேன். தசைபிடிப்பு காயம் குணமடைந்து விட்டது. ரஷ்ய தடகள வீரா வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தடகளத்தில் ஊக்க மருந்து பயன்படுத்துவது பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. விதிமுறைகள் என்பது அனைவருக்கும் பொதுவானது'' எனக் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close