Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்கு வயதில் 12 வயதுக்குட்பட்டோர் அணியில் சேர்ந்த சிறுவன் !

ரு வயதில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஷ்யான், மூன்றே  வயதில் விக்கெட் முன்னர் நிற்க ஆரம்பித்து விட்டான்.  நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இப்போது 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளி அணியில் இடமும் பிடித்துள்ளான். உண்மையில் கிரிக்கெட் பேட்டை தூக்கக் கூட முடியாத வயது.

 

 ஆனால் அட்டகாசமான ஃபிரென்ட் புட் வைத்து பந்தை எதிர்கொள்கிறான். இந்த வயதில் இவ்வளவுத் திறமையா என  பார்ப்பவர்களால் வியப்படையத்தான் முடிகிறது. டெல்லியில் ஹம்ரத் பப்ளிக் பள்ளியில் படித்து வரும் ஷ்யானுக்கு, விராட் கோலிதான் ஆதர்ஷ நாயகன். ஏன் விராட்டை பிடிக்குமென்றால்,  'சதமாக அடித்து தள்ளுகிறார்' என்று மழலையில்  பதில் வருகிறது

ஷ்யானின் தந்தை ஹர்ஷத்தும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். தனது மகன் குறித்து அவர் கூறுகையில், " ஷ்யானுக்கு அபார கிரிக்கெட் அறிவு. நான் எதையுமே கற்றுத் தரவில்லை. இயற்கையாகவே அவனிடம் கிரிக்கெட் திறமை இருந்தது. அதனை நான் பட்டைத் தீட்டினேன் அவ்வளவுதான். எனது குடும்பம் மட்டுமல்ல, நண்பர்கள் கூட நான் ஷ்யானுக்காக நேரத்தை வீணடிப்பதாக கூறினர். ஆனால் கடவுள் அபார கிரிக்கெட் திறமையோடு  என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவனது திறமையை வீணடித்து குழந்தைக்கு  துரோகமிழைக்க விரும்பவில்லை. கடவுள் அவனுக்கு நல்வழி காட்டுவார்" என்றார்.



 

எடிட்டர் சாய்ஸ்