Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமான நிலையத்துக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர்!

போர்ச்சுகல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள  விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த யூரோ கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. சர்வதேச கால்பந்து அரங்கில், போர்ச்சுகல் வென்ற முதல் கோப்பை இதுதான். ரொனால்டோ தலைமையில், போர்ச்சுகல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி இது. இதையடுத்து ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட, அந்த நாட்டு அதிபர் மிகுவேல் அலெகுரேக் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மெடிரா விமான நிலையம்  கிறிஸ்டியானோ ரொனால்டோ விமானநிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மெடிரா நகரில் ரொனால்டோ, நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஹோட்டல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பெஸ்டன் குழுமத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலுக்கு பெயர் 'பெஸ்டன் சிஆர் 7 'என்பதாகும்.

Save

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close