Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நார்சிங்- சுஷில்குமார் மோதல்: ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை இழக்கும் இந்தியா !

க்க மருந்து விவகாரத்தில் இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் சிக்கியுள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு,  உலக  சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற  கோட்டாவில், ரியோ ஒலிம்பிக்கில் 74 கிலோ எடைப்பிரிவில் நார்சிங் யாதவ் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருந்தார்.  தற்போது ஊக்க மருந்து விவகாரத்தால், அவர் தடையை சந்திக்க நேரிடும்.

பல்கேரியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மல்யுத்தக்குழுவினர், நாடு திரும்பியதும் கடந்த ஜுன் 25 ம் தேதி டெல்லியில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. தேசிய ஊக்க மருந்து கட்டுப்பாடு முகமையில் நடந்த இந்த சோதனையில், நார்சிங்கின் ரத்த மாதிரியில் ஸ்டீராய்டு என்ற ஊக்கமருந்து கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் '' நான் எந்த தவறையும் செய்யவில்லை. குற்றமற்றவன்'' என நார்சிங் தெரிவித்துள்ளார்.

பொதுவாக Methandienone ஸ்டீராய்ட்,  ஊசி வழியாகவோ அல்லது மாத்திரை வழியாகவோ,  சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் பானங்கள்  மூலமாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே கலந்து விடலாம். அது போலவே தனக்கு தெரியாமலேயே  உணவிலோ அல்லது குளிர்பானங்களிலோ கூட அது கலந்திருக்கலாம் என நார்சிங் சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.

'' கடந்த 15 ஆண்டுகளாக ஃப்ரீஸ்டைல் பிரிவில் மல்யுத்த வீரனாக களமிறங்கியிருக்கிறேன். 30 முறைக்கும் மேல் ஊக்க மருந்து சோதனை எனக்கு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட பாசிடிவ் ரிசல்ட் வந்ததில்லை '' என்றும் நார்சிங்  மேலும் கூறியுள்ளார்.

மல்யுத்தப் போட்டிகள், எடைப் பிரிவின் கீழ் நடப்பவை. போட்டித் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், ஸ்டீராய்டு உடலில் கலந்ததால் அது உடல் எடையை அதிகரித்து விடும். இதனால் குறிப்பிட்ட எடைப் பிரிவில் போட்டியிட முடியாத நிலை கூட ஏற்படலாம். உடலில் ஸ்டீராய்ட் கலந்தால் 4 முதல் 18 வாரங்கள் வரை ரத்த, சிறுநீர் மாதிரிகளில்  இருப்பது தெரியும். அதனால் ஸ்டீராய்டு பயன்படுத்தப்பட்டால் வீரர்கள் தப்பிப்பது கஷ்டமே.

நவீன காலகட்டத்தில் வீரர்களுக்கு அடிக்கடி ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவதால், 'பிடிபட்டுவிடுவோம் ' என்ற அச்சம் இல்லாமல் இருக்காது. அதனால் ஸ்டீராய்டு பயன்படுத்துவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இது போன்ற விஷயம் நார்சிங்கிற்கு நிச்சயமாக தெரியாமல் இருக்காது. அதனால் இந்த விவகாரத்தை வேறு ஒரு கோணத்தில் அணுக வேண்டியது இருக்கிறது.

இந்திய ரெஸ்லிங் சங்கம்,  இந்த விவகாரத்தில்  நார்சிங்கிற்கு பின்னால் நிற்பது அவருக்கு சற்று ஆறுதல். ஆனாலும், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அவர் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். வீடியோ ஆதாரமோ அல்லது வேறு நேரடி சாட்சியமோ இருந்தால்தான் நார்சிங்கின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படும்.

ஏற்கனவே ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த சுஷில் குமாருக்குப் பதிலாக,  74 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பினை நார்சிங் பெற்றார். சுஷில்குமார் தனிப்பட்ட முறையில் தகுதிச் சுற்றுகளில் பங்கேற்றார். ஆனால் கடைசியாக நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர் என்ற அடிப்படையில்,  நார்சிங் யாதவிற்கு இந்திய மல்யுத்த சங்கம் முன்னுரிமை அளித்தது.

இதற்கு முன் , இந்திய மல்யுத்த வீரர்கள் கோட்டா அடிப்படையில்தான் பங்கேற்றுள்ளனர். சுஷில் குமார் கூட 2004, 2008, 20012 என மூன்று ஒலிம்பிக்கில்  கோட்டா அடிப்படையில்தான் பங்கேற்றார். அதனால் இந்த விஷயத்தில் உரிமை கோருவது நியாயம் இல்லையென சுஷிலுக்கேத்   தெரியும். ஆனாலும் இரண்டு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக சுஷில்குமார் வெண்கலம் வென்றவர். பாப்புலரான வீரரும் என்பதால், நார்சிங் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுஷில் குமார் அட்வான்டேஜ் எடுத்துக்  கொண்டதாகவே தோன்றுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஒலிம்பிக்கில் நார்சிங் பங்கேற்பதை எதிர்த்து சுசில்குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்தியா முழுவதும் பிரபலமான மல்யுத்த வீரர் என்பதால், சுசில்குமாருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில்  'சப்போர்ட் 4 சுஷில் ' என்ற 'ஹேஸ்டேக்' கூட உருவாக்கப்பட்டது.

ஆனால் வழக்கில் நார்சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது. '' இந்திய மல்யுத்த சங்கம், கோட்டா முறையை பின்பற்றி வரும் வேளையில், சுஷில்குமாரின் கோரிக்கை நியாயமற்றது''  என நீதிமன்றம் தீர்ப்பளிக்க, சுஷில்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

தற்போது ஊக்கமருந்து விவகாரத்தில் யாதவ் சிக்கியதும் சுசில்குமார் தனது ட்விட்டர் தளத்தில்,  ''மரியாதை தேடி வரவேண்டும் தேடி போய் பெறக் கூடாது '' என நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.  அத்துடன் நிற்கவில்லை. இன்று ட்விட்டரில், 20 வினாடிகள் ஓடக் கூடிய வீடியோ ஒன்றையும் சுஷில்குமார் வெளியிட்டுள்ளார்.  அதில், ''ரெஸ்லிங்கில் இதுபோன்ற சம்பவங்களை காண்பது அதிர்ச்சியாக இருக்கிறது. எனது வாழ்க்கையை ரெஸ்லிங்கிற்காக அர்ப்பணித்துள்ளேன். நாட்டுக்காக 3வது பதக்கத்தை வெல்வதே எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பயிற்சியில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன். எனக்குப் பதிலாக ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள் பதக்கம் வென்று வருவார்கள் என நம்புகிறேன்''  என்று கூறியுள்ளார்.

சுஷிலின் மாமனாரும் அவரது பயிற்சியாளருமான சத்பால் சிங்,'' நார்சிங் யாதவ், நாட்டிற்கு பெரும் துரோகத்தை இழைத்து விட்டார்''  என' குற்றஞ்சாட்டியுள்ளார்.

நார்சிங் யாதவுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில், இந்தியா சார்பில் 74 கிலோ எடைப்பிரிவில் வேறு ஒரு வீரர் பங்கேற்பது சிக்கல்தான். கடந்த 18 ம் தேதியே இந்த பிரிவுக்கான ஒலிம்பிக் வீரர்களின் பெயர் முன்பதிவு  முடிந்துவிட்டது. காயமடைந்தால் மட்டுமே இனி மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் விதிவிலக்கு அளித்தால், இதேப் பிரிவில் சுஷில் குமாரோ அல்லது அவரது சிஷ்யரான டெல்லியைச் சேர்ந்த பிரவீன் ரானாவோ யாராவது ஒருவர் பங்கற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. விதிவிலக்கு கிடைக்கவில்லையென்றால், 74 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர்களே பங்கேற்க முடியாது.
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close