Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு பின்னடைவு: ஊக்கமருந்து விவகாரத்தில் இந்திரஜித்தும் சிக்கினார்!

க்க மருந்து விவகாரத்தில் மல்யுத்த வீரர் நார்சிங் சிக்கியுள்ள நிலையில், குண்டு எறியும் வீரரரான இந்திரஜித்தும் ஸ்டீராய்டு பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்திய குண்டு எறியும் வீரர் இந்திரஜித்துக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. முதன்முறை எடுக்கப்பட்ட 'ஏ ' மாதிரியில் ஸ்டீராய்டு கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் 'பி ' மாதிரியும் பரிசோதிக்கப்படும். அதிலும் ஸ்டீராய்டு இருப்பது தெரிய வந்தால், அவருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க  தடை விதிக்கப்படும்.

தற்போது 28 வயது இந்திரஜித்தான் ஆசியச் சாம்பியன். கடந்த ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். இந்திரஜித்தின் 'பி' மாதிரியிலும் ஊக்க மருந்து கலந்திருந்தால், சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை விதிகளின் படி, இந்திரஜித் 4 ஆண்டுகள் குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பல வீரர் வீராங்கனைகள் தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெறுவார்கள். ஆனால் இந்திரஜித்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சி எடுக்க நிதி அளித்திருந்தது. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் தனியாக சிறப்பு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று வந்தார். எனவே ரியோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வெல்வது நிச்சயம் என கருதப்பட்டது.

இந்த நிலையில்தான்,  கடந்த 22ம் தேதி, இந்திரஜித்தின் ரத்தம் மற்றும்  சிறுநீர் மாதிரிகள் டெல்லியில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையில், பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதில், ஸ்டீராய்டு பயன்படுத்தியிருப்பது தெரிய வந்ததையடுத்து  இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்திரஜித் விருப்பப்பட்டால் 'பி' மாதிரியும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே நார்சிங் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்
ஒலிம்பிக்கில் 74 கிலோ எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் இந்திரஜித்தும் பங்கேற்கவில்லையென்றால் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கை குறைய வாய்ப்பு ஏற்படும். 

முன்னதாக, 'நாடா ' என்று அழைக்கப்படும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தில்,  பரிசோதனை செய்து கொள்ள மறுத்ததாக இந்திரஜித் மீது  குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே அதிகாரிகள் இந்திரஜித்தை சந்தேகித்துள்ளனர்.  இப்போது அந்த சந்தேகம் உறுதியாகி விட்டதாக தேசிய ஊக்க மருத்து தடுப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close