Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்ததாக மல்யுத்த வீரர் மீது வழக்குப்பதிவு!

ல்யுத்த வீரர் நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த இளம் மல்யுத்த வீரர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ், ஹரியானா மாநிலம்,  சோன்பட் மாவட்டத்தில் உள்ள  ராய் காவல் நிலையத்தில் நேற்று ஒரு  புகார் அளித்திருந்தார். அதில், ''சோன்பட் சாய் மையத்தில் பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராய்டை கலந்துள்ளதாகக் கூறியிருந்தார். அந்த வீரர் டெல்லி சத்ரசால் மையத்தில் பயிற்சிப் பெற்று வருவதாகவும் நார்சிங் தனது புகாரில்  தெரிவித்திருந்தார்.

நார்சிங்கின் புகாரையடுத்து, சில சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, ஜித்தேஷ் மீது  உணவில் விஷம் கலக்குதல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஜிதேஷ்,  ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றுள்ள சுஷில்குமாரின் மாமனார் சத்ரபால்சிங்கிடம், டெல்லி சத்ரசால் மையத்தில், மல்யுத்தப் பயிற்சி பெற்று வருகிறார். செல்வாக்குமிகுந்த சிலரின் சதியால்,  ஊக்கமருந்து விகாரத்தில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிடப்படாமல்  தனது புகாரில் நார்சிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது வரை கைது நடவடிக்கனெதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

 

எடிட்டர் சாய்ஸ்