Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய வீரர்களுடன் ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பேட்ச் சந்திப்பு!

லிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர் வீராங்கனைகளை, சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தமாஸ் பேட்ச் சந்தித்து ஊக்கமளித்தார்.

ஒலிம்பிக் போட்டி, வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி ரியோவில் தொடங்கவுள்ளது. இப்போட்டியை முன்னிட்டு, ரியோ நகரில் ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள் குவியத் தொடங்கியுள்ளனர். ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட், நேற்றிரவு ரியோ சென்றடைந்தார். அதுபோல் இந்திய வீரர்களிலும் பெரும்பாலோனோர் ரியோ சென்று விட்டனர். 

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேட்ச், நேற்று ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய வீரர்களை சந்தித்தார். ஒலிம்பிக் கிராமத்தில், காலை உணவின் போது இந்திய வீரர்களை சந்தித்த தாமஸ் பேட்ச்,   இந்திய வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதற்கிடையே ரியோ  நகரில், மெட்ரோ ரயில் ஊழியர்கள், 9.83 சதவீத ஊதிய உயர்வு வேண்டுமென்றும், ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லையெனில், ஆகஸ்ட் 4 ம் தேதி முதல் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.  ரியோ நகரில் உள்ள ஆங்கரா டாஸ் ரைஸ் என்ற பகுதியில், ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடந்து கொண்டிருந்தது. அதற்குள்  புகுந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் சிலர்,  கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ