Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய பெண் நடுவர்!

தினேழு வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர், ஜோர்டானில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நடுவராக பணியாற்ற, இந்தியாவை சேர்ந்த உவெனா ஃபெர்னாண்டஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஒன்றில், சென்னையை சேர்ந்த கோமளேஸ்வரன் சங்கருக்கு பிறகு பணியாற்றப் போகும் முதல் இந்திய நடுவர் உவெனா ஃபெர்னாண்டஸ்தான். தற்போது 34 வயதான உவெனா, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீராங்கனை. கடந்த 2003 ம் ஆண்டு, ஏ.எப்.சி மகளிர் கால்பந்து தொடரில், இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

கால்பந்தில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு, 2006 ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். விமானப்படை சார்பில் நடத்தப்படும் பள்ளி அளவிலான சுபர்தோ கோப்பை கால்பந்து தொடரில், நடுவராக பணியாற்றத் தொடங்கினார். கடந்த இன்ஷியான் ஆசியப் போட்டியில் நடுவராக சிறப்பாக பணியாற்றினார்.

இந்நிலையில் ஜோர்டானில், வரும் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கவுள்ள பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில்,  நடுவராக பணியாற்றும் வாய்ப்பை, உவெனாவுக்கு ஃபிஃபா வழங்கியுள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு, ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில்,   கோமளேஸ்வரன் சங்கர் நடுவராக பணியாற்றியுள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை ஒன்றில் நடுவராக பணியற்றிய முதல் இந்திய நடுவர் இவர்தான்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ