Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒலிம்பிக் : 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கனவு தகர்ந்தது!

லிம்பிக்கில் 36 ஆண்டுகளுக்கு பிறகு, 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் தகுதி பெற்றிருந்த தரம்பீர்சிங், ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததார்.

பெங்களுருவில் நடந்த இந்தியன் கிராண்ட் ஃபிரீ போட்டியில், 200 மீட்டர் இலக்கை 20.45 விநாடிகளில் கடந்து, ஒலிம்பிக் போட்டிக்கு தரம்பீர் சிங் தகுதி பெற்றிருந்தார். ரியோவுக்கு தகுதி பெற 200 மீட்டர் இலக்கினை, 20.50 விநாடிகளுக்குள் முடிக்க வேண்டும். தரம்வீர் 0.5 மில்லி வினாடி வித்தியாசத்தில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தரம்பீர் சிங், ஊக்கமருத்து சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.  தரம்பீர்சிங் நேற்று ரியோவுக்கு புறப்படுவதாக இருந்தது. ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மல்யுத்த வீரர் நார்சிங் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அவரது உணவில் விஷமிகள் ஸ்டீராய்டை கலந்தது தெரிய வந்ததையடுத்து, ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். குண்டு வீசும் வீரர் இந்திரஜித்தும் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அவரைத் தொடர்ந்து தரம்பீரும் சிக்கியுள்ளார்.

ஒலிம்பிக்கில், கடந்த 1980ம் ஆண்டுக்கு பிறகு, 200 மீட்டர் ஓட்டத்துக்கு தகுதி பெற்றிருந்த இந்திய வீரர் என்ற பெருமையை தரம்பீர் சிங் பெற்றிருந்தார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close