Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆக. 24க்கு மாற்றம்!

நெல்லை: சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக்  ( டி.என்.பி.எல்  ) கிரிக்கெட் போட்டித் தொடரின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னதாகவே போட்டித் தொடங்க உள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர்,  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 27 ம் தேதி தொடங்கும், என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை,  அணிகளின் உரிமையாளர்கள் ஏற்கெனவே ஏலத்தில் எடுத்து,  அணியை தயார்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெற இருப்பதால், டி.என்.பி.எல் போட்டித் தொடரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, சர்வதேசப் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்,  இப்போட்டித் தொடர் 27ம் தேதிக்கு பதிலாக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி, மாலை 6.30 மணிக்கு இப்போட்டியின் தொடக்கவிழா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல்நாள் ஆட்டத்தில் தூத்துக்குடி மற்றும் சேப்பாக்கம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இத்தொடரின் முதல் அரை இறுதிப்போட்டி,  நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட் மைதானத்தில், செப்டம்பர் 16ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது அரை இறுதிப்போட்டி, மறுநாள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த இரு போட்டிகளும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும். மற்ற போட்டிகள் அனைத்தும் அட்டவணையில் ஏற்கெனவே அறிவித்துள்ளபடியே நடைபெறும். '

இப்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

- ஆண்டனிராஜ்    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close