Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்!

லிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று(சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தொடங்கியது.

 தொடக்க விழா கால்பந்து மைதானமான மரக்கானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. தென் அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்த விழாவில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

 

ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவைக் கண்டுகளித்தனர்.

 

இந்தியாவுக்கு துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமையேற்று இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ