Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் இந்தியா : #DAY4:

*

செவ்வாய்க்கிழமை இந்திய ஒலிம்பிற்கு நல்ல நாளாகவே அமைந்தது. வில்வித்தை வீரர். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான அபினவ் பிந்த்ரா, ககன் நரங், சானியா மிர்சா, லியாண்டர் பயஸ் போன்றோர் சாதிக்காத போது, பெரிதும் எதிர்பார்க்கப்படாத பல வீரர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள். 

வில்வித்தை வீரர் அத்தனு தாஸ், குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன், படகு வீரர் தத்து பபன் பொகனால், போன்றவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார்கள்.

வில்வித்தை

நேபால் வீரரான ஜித்பகதூர் முக்தனை 6-0 என்ற கணக்கில் வென்ற இந்தியாவில் அத்தனு தாஸ், அடுத்து க்யூபாவின் அட்ரியன் ஆண்ட்ரெஸை எதிர்கொண்டார். அட்ரியனை 6-4 (28-26 29-26 26-27 27-28 29-28 ) .என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். தென் கொரியாவின் லீ செங்-யன்னை 12-ம் தேதி எதிர்கொள்கிறார் அத்தனு தாஸ். 

ஹாக்கி

ஜெர்மனியிடம் கடைசி நிமிடத்தில் தோற்றதில் பாடம் கற்றுக்கொண்டு, நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா. 6 புள்ளிகளுடன், இரண்டாம் இடத்தில், இந்தியா தற்போது இருப்பதால், காலிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை அதிகரித்து இருக்கிறது. 

 

குத்துச்சண்டை

24 வயதான விகாஸ் கிருஷ்ணன் 75கிலோ பிரிவில் அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். 

படகுப்போட்டி

படகுப்போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்தியாவின் தத்து பபன் போகன்லால், காலிறுதியில் நான்காம் இடம் பெற்று, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

 

*

 

துப்பாக்கி சுடுதல்

நேற்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் தங்க நாயகனான அபினவ் பிந்த்ரா, ககன் நரங், மனவ்ஜித் சிங் சந்து, கெய்னன் செனை ஆகியோர் பங்கேற்றார்கள்.


33 வயதான அபினவ் பிந்த்ரா பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் தொடர் இது. ஐந்து முறை, இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறார் அபினவ் பிந்த்ரா. 2008-ம் ஆண்டு பீஜிங்க் ஒலிம்பிக்கில்  தங்கம் வென்றவர் அபினவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல், லண்டனில் நடைபெற்ற வெண்கலப் பதக்கம் வென்றார் ககன் நரங்.

தகுதி சுற்றில், ககன் நரங் 23வது இடமும், அபினவ் பிந்த்ரா 7வது இடமும் பிடித்தனர். முதல் எட்டு இடங்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதால், அபினவ் பிந்த்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதி சுற்றில், அபினவ் பிந்த்ரா 0.5 புள்ளி வித்தியாசத்தில், நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ட்ராப் ஷூட்டீங்

அதே போல், ட்ராப் ஷூட்டிங் பிரிவில் மனவ்ஜித் சிங் சந்து, கெய்னன் செனை இருவராலும், அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.


 
ஹாக்கி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கியிலும், நேற்று இந்தியாவுக்கு சோதனையே மிஞ்சியது. நடப்பு சாம்பியனான ஜெர்மனியை இந்தியா சந்தித்தது. முதல் போட்டியில் ஜெர்மனி, 6-2 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
1-1 என்ற நிலையில் சென்று கொண்டு இருந்த போட்டி, ட்ராவை நோக்கி நகர்ந்தது. கடைசி, மூன்று நொடிகளில், ஒரு கோல் போட்டு, 2-1 என்ற கணக்கில் இந்தியாவை ஜெர்மனி வென்றது.

இன்று மாலை, நடக்க இருக்கும் போட்டியில் , இத்தாலியை எதிர்கொள்கிறது இந்தியா .

பெண்கள் அணி , ப்ரிட்டனுக்கு எதிராக களம் இறங்கிய ஆட்டத்தில் , 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.

நீச்சல்

ஆண்களுக்கான 200மீட்டர் நீச்சல் பிரிவில் சஜன் பிரகாஷும்,  பெண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் பிரிவில்  ஷிவானி கட்டேரியாவும் பங்கேற்றனர்.. சஜன் பிரகாஷ் 28 வது இடமும்,  ஷிவானி கட்டேரியா 41வது இடமும் பெற்றதால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ