Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஸ்வின், சஹா அதிரடி சதம்...இந்தியா ரன்குவிப்பு...


முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  234 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் ஆட்டத்தை துவங்கியது இந்தியா, இரண்டாவது நாளின் துவக்கத்திலிருந்தே அஸ்வின், சஹா இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. தமிழக வீரர் அஸ்வின் 99 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்து தனது 4வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 4 சதங்களுமே மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்திய விக்கெட் கீப்பர் சஹா தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அஸ்வின் - சஹா இணை 6வது விக்கெட்டுக்கு 213  ரன்களை குவித்தது. இருவரும் ஆட்டமிழக்க இந்திய அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மே.இ.தீவுகள் தரப்பில் புதுமுக வீரர் ஜோசப் 3 விக்கெடுகளை வீழ்த்தினார். அடுத்து ஆடிய மே.இ,தீவுகள் அணி ஆட்ட நேர முடிவில் 107 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

246 ரன்கள் பின் தங்கியுள்ளது மே.இ.தீவுகள் அணி. மூன்றாவது நாள் ஆட்டம் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ