Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்: களத்தில் மகள்... தவிப்பில் பெற்றோர்! - (வைரல் வீடியோ)

“இப்படியெல்லாம் நிஜத்தில் ஜிம்னாஸ்டிக் செய்ய முடியுமா ?“ என நெட்டிசன் ஒருவர், வீடியோ ஒன்றை ஷேர் செய்ய. அந்த வீடியோவை ஒரே நாளில் 1.5 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, “பல ஆண்டுகளின் உழைப்பு இது. மில்லியன் முறை , மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். 14 வயதில் இருந்து இதற்கு பயிற்சி எடுக்கிறேன்” என அந்த ட்விட்டிற்கு ரிப்ளை செய்து இருக்கிறார் அந்த வீடியோவில் அசத்தியிருக்கும் வீராங்கனை. அவர், அலெக்ஸாண்ட்ரா ரைஸ்மான் .

 யூத - அமெரிக்கரான அலெக்ஸாண்ட்ரா , அமெரிக்காவிற்கு தங்கம் வென்ற மற்றொரு தங்கமகள். அவரது அணி, அவருக்கு சூட்டியிருக்கும் செல்லப் பெயர் 'கிராண்ட்மா'. காரணம், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் கேப்டனான அலெக்ஸாண்ட்ராதான், அந்த அணியின் மூத்த வீரராம். அவரின் வயது 22.

ஆனால், அலெக்ஸாண்ட்ராவின் வீடியோவையும் மீறி ஒரு வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துக்கொண்டு இருக்கிறது. அது அலெக்ஸாண்ட்ராவின் தாயார் வீடியோ. 2012-ம் ஆண்டு நடந்த போட்டியிலும் சரி, தற்போது நடந்த போட்டியிலும் சரி, மகளின் ஒவ்வொரு அசைவிற்கும் பதற்றமும், பரிதவிப்புமாக ரியாக்ஷன் தருகிறார் அலெக்ஸாண்ட்ராவின் தாயார்.

இந்திய கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயனின் தாயார், தனது மகனின் கார் பந்தயங்களை எப்போதும் தான் நேரடியாக பார்த்தது கிடையாது என்று சில வருடங்களுக்கு முன்னர், ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மறு ஒளிபரப்பின்போது மட்டுமே பார்ப்பாராம். சாகசங்கள் எவ்வளவு செய்தாலும், வீரர்களின் பெற்றோருக்கு அது தங்கள் மகன்/ மகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையே தரும்.

அந்த வீடியோவைக் காண...

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ