Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அத்துமீறல்: இந்திய அமைச்சரை எச்சரித்த ஒலிம்பிக் கமிட்டி!

ந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலின் அத்துமீறல் நடவடிக்கையால், அவரது ஒலிம்பிக் பார்வையாளருக்கான அங்கீகார அட்டையை ரத்து செய்து விடப்போவதாக ரியோ ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்துள்ளது.

ரியொவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியை  காண விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், தனது பரிவாரங்கள் சிலருடன் சென்றுள்ளார். அங்கு அவர் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவசியமின்றி அடிக்கடி சென்றுள்ளார். இது தெரியவந்தபின் ஒலிம்பிக் ஆர்கனைசிங் கமிட்டி பல முறை அவரை எச்சரித்தது. அவர் கேட்கவில்லை போலும். இந்தியாவில் இருப்பதைப்போன்ற நினைப்பிலேயே தொடர்ந்து அங்கு நடமாடியிருக்கிறார். இந்த அத்துமீறலால் ரியோ ஒலிம்பிக் ஆர்கனைசிங் கமிட்டி, விஜய் கோயலின் அடையாள அட்டையை பறித்து விடுவோம் என எச்சரித்துள்ளது.

இது குறித்து ஒலிம்பிக் ஆர்கனைசிங் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஷாரா பீட்டர்சன் இந்தியக் குழுத் தலைவரான ராகேஷ் குப்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், '' உங்கள் அமைச்சர் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அங்கீகாரமில்லாத தனிநபர்களுடன் அடிக்கடி புகுந்துவிடுவதாக புகார் வருகிறது. பாதுகாவலர்கள் தடுத்தால் முரட்டுத்தனமாக நடப்பதாகவும் சில நேரங்களில் பாதுகாவலர்களை நெட்டித் தள்ளுவதாகவும் சொல்லப்படுகிறது. 

இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று கூட ஜிம்னாஸ்டிக் மைதானத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இனிமேல், இது தொடர்ந்தால் உங்கள் விளையாட்டு அமைச்சரின் அடையாள அட்டையை ரத்து செய்ய நேரிடும். ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்படும்.  எங்களுக்கு வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். தகவலை உங்கள் அமைச்சருக்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம்'' என கூறப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கை கடிதத்திற்குப்பின் ஒலிம்பிக் கிராமத்தில் அமைச்சர் இருக்கும் இடம் தெரியவில்லையாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close