Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுஷாந்த் சிங் ராஜ்புத்: மிஸ்டர் கூலை கடுப்பேற்றிய ஹீரோ...!

வெளியான 12 மணி நேரத்தில், 25 லட்சம் ஹிட்ஸ் அள்ளி இருக்கிறது 'M.S.தோனி - தி அன்டோல்ட் ஜர்னி' படத்தின் ட்ரெய்லர். படத்தில், தோனியின் கதாபாத்திரத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார்.

தோனியின் மேனரிசங்களை ஃபாலோ செய்ய, தோனியிடம் தொடர்ந்து பேசி வந்தாராம் சுஷாந்த். ஒரு கட்டத்தில் மிஸ்டர்.கூல் தோனியே கடுப்பாகி விட்டாராம்.

"முதல் முறையாக, தோனி கடுப்பாகி அன்றுதான் பார்த்தேன். முதல் மூன்று நாட்கள். தோனி அமைதியாக பதில் சொன்னார். 'இன்னும் நிறைய கேளுங்க. நான் மொத்தமா பதில் சொல்றேன்...' என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நான் ஒரே கேள்வியை வேறு வேறு விதமாக கேட்டேன்.அதற்கு பதில் அளித்த தோனி, 'நம்மை பற்றி நாமே, 15 நிமிடத்திற்கு மேல் பேச முடியாது. போர் அடித்துவிடும். பிறகு பேசுகிறேன்' என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்" என தனது அனுபவத்தை சுஷாந்த் கூறியுள்ளார்.

படத்தில் நடித்தது பற்றி, சுஷாந்த் கூறும் போது, " 2007-ம் ஆண்டு, பெரும் முயற்சி எடுத்து, தோனியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அவரைப் பற்றி தெரிந்து கொள்வதும், அவராகவே நடிப்பதும், ஜாலியான ஒரு விஷயமாகவே இருந்தது. எங்கும் மன உளைச்சலாக கருதவில்லை."

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸுடன் இணைந்து தோனி இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார். தோனியின் சகோதரியாக பூமிகா நடித்து இருக்கிறார். படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக  இருக்கிறது." என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ