Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மறக்க முடியாத நாள்!- மனம் வருந்தும் சேவக்! #ThrowBack

'இன்றைய தினத்தை மறக்க முடியாது. 99 ரன்களிலிருந்து சிக்ஸர் அடித்தும் என்னால் சதமடிக்க முடியவில்லை' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சேவக். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இலங்கையுடனான ஒருநாள் போட்டியில் இலங்கை 170 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் சேவக் அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இந்தியா வெற்றிபெற ஒருரன் தேவை என்ற நிலையில், சேவக் 99 ரன்களில் இருந்தார். சுராஜ் ரன்திவ் வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்கிய சேவக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியா வெற்றி; ஆனால் சேவக் சதமில்லை என்பது தான் அது. காரணம் பந்தை வேண்டுமென்றே நோ பாலாக வீசினார் ரன்திவ். அதனால் நோபாலிலேயே இந்தியா வென்றுவிட்டது. சேவக்கின் சிக்ஸரை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. 

 

 

இதைத்தான் ரன்திவ் பெயரை குறிப்பிட்டு ஆறு வருடம் கழித்து இதே நாளில் நினைவு கூர்ந்துள்ளார் சேவக். இந்த ஆட்டத்தை நேரில் பார்த்து சேவக்கிற்காக வருந்தினோம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ