Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எனக்கு பீரியட்ஸ்... ஸாரி!” - ஒலிம்பிக் வீராங்கனை ஃப்யூ யுவான் ஹூய்

'என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். ஆனாலும், எனக்கு இன்று மாதவிடாய், அதனால் ஏற்பட்ட உடற்சோர்வால்தான் என்னால் மற்ற போட்டியாளர்களை வீழ்த்தி முன்னேறமுடியவில்லை. இதை என் தோல்விக்கான காரணியாக நான் சொல்லக்கூடாதுதான். இருந்தாலும் மாதவிடாய் காலச் சோர்வால்தான் நான் பின் தங்கிவிட்டேன் என்பதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை’ இப்படித் தன்னுடைய மாதவிடாய் குறித்து தைரியமாக பேசி பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றிருப்பவர் ரியோ ஒலிம்பிக் 4X100 தொடர் நீச்சல் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்ற சீனாவின் நீச்சல் வீராங்கனையான ஃப்யூ யுவான் ஹூய் (Fu Yuan Hui)

நான்கு பேர் கொண்ட குழுவாக, நடந்த இந்த தொடர் நீச்சல் போட்டியில், இவரது குழு நான்காவதாக  வந்தது. இவர் தாமதமாக நீந்தியதுதான் இவர் குழு பதக்கம் வாங்காததற்கு காரணம் என்றும், இவருடைய உடல்நலக் குறைவினை வயிற்றுவலி என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டபோது, அதற்கு பதிலளித்த ஃப்யூ, ’நான் சரியாக நீந்தவில்லை என்று எனக்குத் தெரியும். என்னுடைய சக வீரர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனினும், நேற்றிரவு முதல் ஏற்பட்ட மாதவிடாய் காரணமாகவே என்னால் சரியாக நீந்த முடியவில்லை’ என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

20 வயதான ஃப்யூ, 100 மீட்டர் நீச்சல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில், 4X100 தொடர் ஓட்ட நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். எனினும், அவரால் மாதவிடாய் பிரச்னையால் சரிவர நீந்த முடியவில்லை.  நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும்போதே தன்னுடைய சக நீச்சல் வீராங்கனை உதவியுடன், முகம் முழுவதும் வலியினால் ஏற்பட்ட வேதனையுடன் வெளிவந்த ஃப்யூ, பெண்களின் உடல் சார்ந்த பிரச்னை குறித்து பொதுவெளியில் தைரியமாக சமூகக் கட்டமைப்புகளை உடைத்தெறிந்து பேசியது, ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு மழையினைக் குவித்து விட்டது.

‘பெண்களுக்கு எதிரான மூடத்தனமான கோட்பாடுகளை ஒரே வார்த்தையில் உடைத்தெறிந்து விட்டார் ஃப்யூ யுவான் ஹூய். உங்கள் நலம் சார்ந்த தயக்கங்களை வெளியில் சொல்லத் தயங்காதீர்கள் பெண்களே’ என்று ட்விட்டர்வாசிகள் ஃப்யூ-விற்கு புகழாரம் சூட்டிவிட்டனர்.

ஏன், கடந்த 116 வருடங்களாகப் பெண்கள் ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கிறார்கள். ஆண்களுக்கு இணையாக மெடல்களையும், பாராட்டுகளையும் குவித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், அத்தனை பேரும் போட்டியின்போதோ, பயிற்சியின்போதோ கண்டிப்பாக தங்களது மாதவிடாய் நாட்களைப் பெற்றிருப்பார்கள். அதனால் கூட சரிவர பங்களிக்க முடியாமல் அவர்களில் சிலர் தோல்வியைத் தழுவியிருக்கலாம்.

ஆனால், அத்தனைப் பெண்களுக்கும் மத்தியில் ’ஒலிம்பிக்’ என்னும் பெருவெளியில் மாதவிடாய் வலியால் என்னால் நீந்த முடியவில்லை என்று சமூக கோட்பாடுகளைத் தகர்த்தெறிந்த ஃப்யூ யுவான் ஹூய் வித்தியாசமான பெண்மணிதான்!

-பா.விஜயலட்சுமி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ