Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவிற்கு 4 ஆண்டுகளுக்கு தடை!

ரியோ டி ஜெனிரோ: ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், 74 கிலோ பிரிவில் வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். கடந்த ஜூன் 25-ம் தேதி இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.

அதில், தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.

இதற்கிடையே, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம், நர்சிங் யாதவ் பிரச்னை குறித்து விசாரணை நடத்தியது. அப்போது, தனக்கு தெரியாமல் உணவில் ஊக்க மருந்தை யாரோ கலந்து விட்டதாகவும், இது தனக்கு எதிராக நடந்த சதி என்றும் நர்சிங் யாதவ் குற்றஞ்சாட்டினார். மேலும், ஆணையம் முன் ஆஜராகி 600 பக்க விளக்கத்தையும் அவர் சமர்ப்பித்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில், ''நர்சிங் யாதவ் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளலாம். நர்சிங் யாதவ் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்க மருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தி உள்ளார்" என்று ஆணையம் தெரிவித்திருந்தது.

 

இதையடுத்து, இந்தியாவின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து, உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது.

இந்நிலையில், உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும், நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் அது தடை விதித்துள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close