Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எனது இலக்கு தங்கம்..!' - சிந்து உற்சாகம்

சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்று ஆரம்பித்து வைத்த இந்தியாவின் பதக்கப்பட்டியலை, மேலும் அழகூட்ட இருக்கிறார் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து. நேற்று நடந்த பேட்மிட்டன் போட்டியில் அனல் பறந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தார் சிந்து. உலகின் நம்பர் ஒன் வீரரான கரோலினா மரினை, இன்று மாலை 6.55 மணிக்கு இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் சிந்து.

49 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில், 21-19,21-10 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் சிந்து. இரண்டாவது செட்டில் திடீரென பி.வி.சிந்து விஸ்வரூபம் எடுத்தார். 11-10 என்ற நிலையில் இருந்து அடுத்த பத்து புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் சிந்து. முடிவில், 21-10 என இரண்டாவது செட்டையும் கைப்பற்ற, இந்த போட்டியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை இந்தியர்களும் உணர்ச்சிவயப்பட்டனர்.

நேற்றைய போட்டி முடிந்ததும், ''என்னுடைய நோக்கம் தங்கம் வெல்வதுதான். அதற்காக கடுமையாக போராடுவேன். எனது முழு முயற்சியையும் அதற்கு தருவேன். எல்லோருடைய எண்ணமும், ஒலிம்பிக்கில் ஏதாவது ஒரு பதக்கம் வெல்வதுதான். இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. நிச்சயமாக எனக்கு வாய்ய்ப்பு இருக்கிறது. இன்றைய போட்டிக்கு தயராக இருக்கிறேன். கரோலினா மரின் கடுமையான போட்டியாளர். அவர் சிறப்பாக ஆடி வருகிறார். இடது கை ஆட்டக்காரரான மரினுக்கு எதிராக எனது பயிற்சியாளர் தரும் ஆலோசனைகளின்படி விளையாடுவேன்" என்றார்.

சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ''எல்லா போட்டிகளிலும், ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார் சிந்து. நேற்றைய வெற்றி மிகவும் சிறப்பானது. இன்று நடைபெற இருக்கும் போட்டி, மிகவும் சவால் நிறைந்தது. இந்த ஆட்டத்தில் சிந்து, தனது முழு ஆட்டத் திறனையும் வெளிப்படுத்துவார்" என்றார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ