Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரியோ ஒலிம்பிக்: இந்திய வீராங்கனைகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

காலையிலிருந்து வாட்ஸ் அப் ரிங் டோன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பார்க்காமலேயே சொல்லிவிடலாம், ஒலிம்பிக் நாயகி பி.வி சிந்துவுக்கு வாழ்த்து செய்தியாகத்தான் இருக்கும்.  ஆனால் ஒலிம்பிக் தொடங்கிய காலத்தில், பெண்கள் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியுமா? கி.மு. 776 ல், கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில், ஒருநாள் போட்டியாகத்தான் அது துவங்கியது. அந்த இடத்தின் பெயரையே போட்டிக்கான பெயராகவும் (ஒலிம்பிக்) சூட்டிவிட்டனர் கிரேக்கர்கள். இதில் கலந்துகொள்ள கிரேக்கத்தின் ஒவ்வொரு நகரில் இருந்தும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஒலிம்பியாவை நோக்கி வந்தனர்.

கிரேக்கர்களின் கடவுளாகக் கருதப்படும் ஜீயஸ் மற்றும் ஹேரா ஆகியோரை வழிபட்டு, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவக்கப்பட்டன. ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பெண்களுக்கென ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக பெண்கள் மட்டுமே பங்கேற்று, அவர்களுடைய திறனை வெளிப்படுத்த ஹேரேயா போட்டிகள் என்று தனியாக நடத்தப்பட்டன. கிரேக்க கடவுளான ஜீயசின் மனைவி ஹேரா பெயரால் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.  

பின், 1900ல் பாரிஸில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டியில்தான், பெண்கள் முதன் முதலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள். சார்லோட் கூப்பர் என்ற அமெரிக்காவை சேர்ந்த பெண்தான் முதலில் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் வென்ற முதல் பெண், கர்ணம் மல்லேஸ்வரி. ஆந்திராவை சேர்ந்த கர்ணம், 2000ல் சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வாங்கினார்.

2012-ல் மேரி கோம்! லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மணிப்பூரை சேர்ந்த குத்துசண்டை வீராங்கனையான மேரி கோம், வெண்கல பதக்கத்தை வென்று, இந்தியாவின் முகம் ஆனார்.

இந்தியாவின் அடுத்த அடையாளம் ஹரியானாவை சேர்ந்த சாய்னா நேவால், அதே 2012 ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்.

ரியோ ஒலிம்பிக்கில் நம் பெண்கள்!

* இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 65 ஆண்களும் 54 பெண்களும் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 36 வருடங்களில் இல்லாமல் இந்த முறைதான் இந்திய பெண் ஹாக்கி டீம், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது.

* 2012 ல் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தேர்வான இந்தியாவைச் சேர்ந்த கீதா போகட், இந்த முறை மீண்டும் தேர்வானார் மற்றும்  3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்ச்சேஸ் ஓட்டத்தில், ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்று வரை சென்று இருகிறார் லலிதா பார்பர்.

* இந்தியாவிலிருந்து முதல்முறையாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் முதல் பெண் டூட்டி சந்த். கடந்த 36 வருடங்களில் எந்த பெண்ணும் செய்யாத சாதனை இது.

* சாக்ஷி மாலிக். ஹரியானவை சேர்ந்தவர். ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார்.

* மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், அரையிறுதிச் சுற்றில் வென்று இருக்கிறார் பி.வி.சிந்து. இறுதிப்போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

* ஜிம்னாஸ்டிக் போட்டியில்  தீபா கர்மகர் நான்காவது இடம் வென்று இருக்கிறார்.

இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், இந்த வீராங்கனைகள் இந்த அளவுக்கு முன்னேறியதே இந்திய தங்கம் வென்றதற்கு சமம்தான்.

நம் நாட்டு தடகள வீராங்கனையான புதுக்கோட்டையை சேர்ந்த சாந்தி, இன்னமும் சரியான நீதி கிடைக்காமல் போராடி வருகிறார். ஊழல் மலிந்து கிடக்கும் இந்திய விளையாட்டுத் துறையினால், திறமையான விளையாட்டு வீரர்கள் வெளி வருவது எவ்வளவு பெரிய போராட்டம்? குடும்ப வறுமை, ஸ்பான்ஸர் இன்மை, சிபாரிசு, பாலியல் தொந்தரவுகள் என நீண்ட போராட்டத்தில், வெளியில் வர முடியாமல், தம் திறமையுடன் தன்னளவிலே முடங்கிப்போனாவர்கள் எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி இருப்பது நமக்கு தெரியும்.

அப்படி இருக்கையில், மேலே சொன்ன பெண்களில் செய்திருப்பது சாதனைதானே.. தங்கம் வாங்கவில்லை என்றாலும் நாம் அவர்களை கொண்டாட வேண்டும்.

சியர்ஸ் அப் கேர்ள்ஸ்!

- கே. அபிநயா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close