Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கிரிக்கெட் வீராங்கனை!

லிம்பிக்கில் 96 ஆண்டுகளுக்கு பிறகு, தென்ஆப்ரிக்காவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

கடந்த 2000ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்தவர் சன்னெட் வில்ஜோயன். தென்ஆப்ரிக்க அணிக்காக 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆல்ரவுண்டரான சன்னெட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதோடு 198 ரன்களையும் அடித்திருந்தார். ஒரு டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கியுள்ளார்.கடந்த 2002ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக அவர் 71 ரன்கள் எடுத்தார்.  

தற்போது 33 வயதான சன்னெட், கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்ல ஈட்டி எறிவதிலும் வல்லமை படைத்தவர். தற்போது ரியோ ஒலிம்பிக்கிலும் தென்ஆப்ரிக்கா சார்பில் ஈட்டி எறிதலில் பங்கேற்றுள்ளார். நேற்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், சன்னெட் 64.92 தூரம்  வீசி வெள்ளி வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் தென்ஆப்ரிக்க  வீராங்கனை சன்னெட்தான்.

இதற்கு முன் கடந்த 1908ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோனி டக்ளஸ் குத்துச்சண்டையில் தங்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 1920ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக் மேக்பிரயன், பிரிட்டன் ஹாக்கி அணிக்காக விளையாடி தங்கம் வென்றிருந்தார். தற்போது 96 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் பங்கேற்றிருந்தார். அப்போது பதக்கம் கிடைப்பவில்லை. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் சன்னெட் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

தென்ஆப்ரிக்காவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பன்முகத் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் பல விளையாட்டுகளில் திறமை மிகுந்தவர். ஜான்டி ரோட்ஸ் கடந்த 1996ம் ஆண்டு ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம் பெற்று காயம் காரணமாக வெளியேறியவர். தென்ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மெர்ச்சன்ட் டி லாங்கே, ஈட்டி எறியும் வீரராக இருந்து கிரிக்கெட்டுக்கு மாறியவர்.

                                                                                                                                                                                     - எம்.குமரேசன் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ