Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''சாக்‌ஷிக்கு இதுதான் பக்கா பரிசு!'' - மஹிந்திராவின் அன்பளிப்பு

பப்ளிக் ரிசல்ட் ஆனாலும், பதக்க ரிசல்ட் ஆனாலும் பொண்ணுங்கதான் எப்பவுமே டாப்! ‘இறுதிச்சுற்று’ பட க்ளைமேக்ஸை ஒட்டுமொத்த உலகமுமே ஆகஸ்ட் 18-ம் தேதி லைவ்வாக, ரியலாகப் பார்த்துக் களித்தது. ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்ற குதூகலமான நேரம் அது. அரசாங்கமோ, அதிகாரிகளோ, தனவான்களோ - வழக்கம்போல் விளையாட்டு வீரர்களை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அனைவரும், பதக்கப் பட்டியலில் இந்திய வீரரின் பெயரைப் பார்த்ததும், திருப்பதி கோயில் உண்டியலில் பணத்தைக் கொட்டுவதுபோல் பரிசுகளாகக் கொட்டுவார்கள். உ.பி அரசின் உயரிய ராணி லட்சுமிபாய் விருது, ஹரியானா அரசாங்கத்தின் இரண்டரை கோடி ரூபாய், சமாஜ்வாடி கட்சியின் 3 லட்சம், சல்மான்கானின் 1 லட்சம் என்று சாக்‌ஷிக்குப் பரிசுகள் குவிந்து வரும் வேளையில், ‘நாங்களும் கிளம்பிட்டோம்ல’ என்று கிளம்பிவிட்டது மஹிந்திரா கார் நிறுவனம்.

 

மஹிந்திராவின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா, சாக்‌ஷிக்கு பதக்கப் பரிசாக தனது மஹிந்திரா ‘தார்’ ஜீப்பைப் பரிசாக அளித்துக் கௌரவப்படுத்தி இருக்கிறார். ‘‘சாக்‌ஷிக்கு எவ்வளவோ பரிசுகள் வந்திருந்தாலும், இதுதான் அவரின் தன்மைக்கு ஏற்ற பரிசாக இருக்கும்!’’ என்று பெருமைப்பட்டிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

‘‘சாக்‌ஷி, இப்போது இந்தியாவின் மிகப் பெரிய மல்யுத்த வீராங்கனை. அவருடைய ஸ்டைலுக்கும், தன்மைக்கும் ‘தார்’ போன்ற ஆஃப்ரோடு கார்களில் பயணிப்பதுதான் அவருக்குச் சிறந்த கௌரவமாக இருக்கும். அவருக்கு தார் 4 வீல் டிரைவ் மாடலைப் பரிசாக அளிப்பதில் மஹிந்திரா கௌரவப்படுகிறது!’’ என்று கௌரவப்படுகிறார் ஆனந்த் மஹிந்திரா. 

(பின்குறிப்பு: நேற்று நடந்த இறுதிப்போட்டியில், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கும், தார் ஜீப்பை பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.) 

-தமிழ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ