Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் :சீனாவை பின்னுக்குத் தள்ளியது பிரிட்டன்! #Olympic2016

                                                                                                             

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலம்பிக் போட்டி கடந்த 5ம் தேதி ரியோடி ஜெனிரோவில் தொடங்கி இன்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.  32வது ஒலிம்பிக் போட்டி டோக்கியோ நகரில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ளது. ரியோடி ஜெனிரோவில் நடந்த நிறைவுவிழா நிகழ்ச்சியின் போது, ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடரும் அமெரிக்க ஆதிக்கம்

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் அமெரிக்க அணி 46 தங்கம் 37 வெள்ளி 38 வெண்கல பதக்கங்களுடன் ( 121)வென்று முதலிடத்தை பிடித்தது. கிரேட் பிரிட்டன் 27 தங்கம் 23 வெள்ளி 27 வெண்கலப்பதக்கங்களுடன் (67) 2வது இடத்தையும் சீனா 26 தங்கம் 18 வெள்ளி 26 வெண்கல பதக்கங்களுடன் ( 70) 3வது இடத்தையும் பிடித்தன. ரஷ்யா 19 தங்கம் 18 வெள்ளி 19 வெண்கலப்பதக்கங்களை பெற்று ( 56)4வது இடத்தையும் ஜெர்மனி 17 தங்கம் 10 வெள்ளி 15 வெண்கலப்பதக்கங்ளுடன்  ( 42) 5வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்களுடன் 67வது இடத்தை பிடித்தது.

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 17வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த முறை சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது கிரேட் பிரிட்டன். இதற்கு முன், கடந்த 1908–ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பிரிட்டன் முதலிடத்தை பெற்றிருந்தது. அதற்கு பிறகு இந்த ஒலிம்பிக்கில்தான் பிரிட்டன் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியா 118 வீரர் -வீராங்கனைகளுடன் 15 பிரிவுகளில் பங்கேற்றது. பேட்மிண்டன் வீராங்கனை சிந்து வெள்ளியும் மல்யுத்த வீராங்கனை சாக் ஷி வெண்கலமும் வென்றனர். லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா, ரியோவில் இரண்டே பதக்கங்களுடன் நாடு திரும்ப வேண்டியதாகி விட்டது.


ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற 10  நாடுகள்

இந்த ஒலிம்பிக்கில் 9 நாடுகள் முதல் முறையாகத் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளன. ஒலிம்பிக்கில் முதன் முறையாக பங்கேற்ற கொசோவா தங்கம் வென்று அசத்தியது. அந்த நாட்டை சேர்ந்த மெஜ்லிண்டா கெல்மென்டி 52 கிலோ பிரிவு ஜுடோவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 18 லட்சம்தான். கடந்த 2008 ஆண்டுதான் கொசோவா தனிநாடாக உதித்தது.

குவைத் அணியும் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது. அந்த நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஃபெஹாய்த் அல் திஹானி டபுள் ட்ராக் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார். ஆனால் குவைத்துக்கு ஒலிம்பிக் சங்கம் தடை விதித்திருப்பதால், ' இன்டிபென்டன்ட் அத்லெட்' என்ற பெயரில் ஒலிம்பிக் கொடியின் கீழ்தான் அவரால் பங்கேற்க முடிந்தது.

ரக்பி செவன்ஸ் போட்டியில் ஃபிஜி முதல் ஒலிம்பிக் தங்கத்தை பெற்றது. ஃபிஜி 60 ஆண்டுகளாக பதக்கப்பட்டியலில் இடம் பெற்றதில்லை. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 10 லட்சத்திற்குள்தான்.

சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங் 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சலில் அமெரிக்க வீரர் பெல்ப்சை தோற்கடித்து தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது.

பஹரைன் வீராங்கனை ரூத் ஜெபத் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்ச்சேஸ் போட்டியில் தங்கம் வென்றார்.  ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்துக்காக பஹரைன் 32 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. 

சுமார் இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட ஐவரி கோஸ்ட் இந்த ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 52 ஆண்டுகள் இதற்காக ஐவரி கோஸ்ட் காத்திருந்தது. டேக்வான்டோ 80 கிலோ எடைப்பிரிவில் ஷேக் செல்லா சிஸ்சே என்ற வீரர் அந்த நாட்டுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். இதற்கு முன் 1984ம் ஆண்டு ஐவரிகோஸ்ட் வெள்ளி வென்றிருந்தது.

சுமார் 95 லட்ச மக்கள் தொகை கொண்ட ஜோர்டன் ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 68 கிலோ எடைப்பிரிவில் அகமது, ஜோர்டானுக்காக தங்கம் வென்றார். இதற்காக 36 ஆண்டுகள் ஜோர்டான் காத்திருந்தது.

37 லட்ச மக்கள் தொகை கொண்ட புர்தோ ரிகோ நாட்டின் டென்னிஸ் வீராங்கனை மோனிகா பக், மகளிர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தொடங்கி 68 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாடு தங்கம் வென்றுள்ளது.

ஹேமர் த்ரோவில் தஜிகிஸ்தானைச் சேர்ந்த தில்ஷாத் நஷரோவ் தங்கம் வென்றார். 88 லட்ச மக்கள் தொகை கொண்ட தஜ்கிஸ்தான் 20 ஆண்டுகள் இதற்காக காத்திருந்தது.

வியட்நாம் வீரர்  ஹோங் ஜியான் வுன் , துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாடு ஒற்றைத் தங்கத்துக்காக 64 ஆண்டுகள் காத்திருந்தது.

பெல்ப்ஸ் ஓய்வு அறிவிப்பு

அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் இந்த ஒலிம்பிக்கில் 6 பிரிவுகளில் பங்கேற்றார். 200 மீட்டர் பட்டர்ஃபிளை, 200 மீட்டர் மெட்லி , 4×100 ஃபிரீஸ்டைல், 2×100  ஃஃபிரீஸ்டைல் ,4×100  மெட்லி நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார். 100 மீட்டர் பட்டர்ஃ பிளை பிரிவில் வெள்ளி வென்றார். அத்துடன் ஒலிம்பிக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிலித்துள்ளார் பெல்ப்ஸ். இவரது கணக்கில் 23 தங்கப்பதக்கங்களும் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்ளுடம் ஒலிம்பிக்கில் வென்றுள்ளார் பெல்ப்ஸ்.

லண்டன் ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பிரிட்டன் வீரர்  மோ பாரா ரியோ இதே பிரிவுகளில் ரியோவில் தங்கம் வென்றார். தற்போது 33 வயதான மோ பாராதான், தொலை தூர ஓட்டமான இந்த பிரிவுகளில் தொடர்ந்து இரு முறை தங்கம் வென்ற 2வது வீரர். இதற்கு முன் பின்லாந்து  வீரர் லசே வெரன், 1972 ,76ம் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார்.

ஒலிம்பிக் 100, 200 ,  4×100 ரிலே ஓட்டங்களில் பெய்ஜிங், லண்டனைத் தொடர்ந்து ரியோவிலும் தங்கம் வென்றார் உசேன் போல்ட். 30 வயதான உசேன் போல்ட் இந்த ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற்றுள்ளார். ஜமைக்காவின் புதிய தங்க மங்கையாக எலைன் தாம்சன் உருவெடுத்துள்ளார். இவர், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு தங்கம் வென்று கொடுத்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் பிரேவில் போல் வால்ட் வீரர் பிராஸ்டா சில்வா 6.03 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஒலிம்பிக் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனால் லாவினெனி 5.97 மீட்டர் தாண்டியதே ஒலிம்பிக் சாதனை. அதனை பிராஸ்டா சில்வா முறியடித்தார்.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4 தஙகப்பதக்கம் ஒரு வெள்ளி வென்று அசத்தினார். பேலன்ஸ் பீம் பிரிவில் மட்டும்தான் சிமோனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மற்ற அனைத்துப் பிரிவிகளிலும் சிமோன் தங்கம் அறுவடை செய்தார். 

19 வயது அமெரிக்க நீச்சல் வீராங்கனை கேத்தே லெடிக்கி இந்த ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினார். 200 , 400 மீட்டர் ஃபிரீ ஸ்டைல், 800 மீட்டர் ஃபிரீ ஸ்டைல், 2×100  பிரீஸ்டைல் பிரிவுகளில் வெள்ளி வென்று அசத்தினார். ஒலிம்பிக்கில் இதுவரை 5 தங்கப்பதக்கங்களையும் 1 வெள்ளியையும் கேத்தே லெடிகி வென்றுள்ளார்.

பாலினச் சர்ச்சையில் சிக்கிய தென்ஆப்ரிக்கத் தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா முதல் முறையாக ஒலிம்பிக் தங்கத்தை ருசித்துள்ளார்.. நேற்று நடந்த 800 மீட்டர் ஓட்டத்தில் இவர் தங்கம் வென்று அசத்தினார். லண்டன் ஒலிம்பிக்கில் இதே பிரிவில் இவர் வெள்ளி வென்றிருந்தார். செமன்யாவின் உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. தடை நீக்கப்பட்டதையடுத்து தற்போது ஒலிம்பிக்கில் சாதித்துக் காட்டியுள்ளார் செமன்யா.

-எம்.குமரேசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ