3 Central Govt Announces khel ratna and arjuna awards: PV Sindhu, rahane in the list | சிந்துக்கு கேல்ரத்னா, ரஹானேக்கு அர்ஜுனா..! மத்திய அரசு விருதுகள் அறிவிப்பு
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிந்துக்கு கேல்ரத்னா, ரஹானேக்கு அர்ஜுனா..! மத்திய அரசு விருதுகள் அறிவிப்பு

 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்ஷி மலிக் ஆகியோருக்கு கேல் ரத்னா விருதும், கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் தலைநகர் ரியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கமும், மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மலிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் 4வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், சிந்து, மலிக் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். தற்போது இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஜிது ராய் ஆகியோருக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த பயிற்சியாளர் மஹாபீர் சிங், நீச்சல் போட்டி பயிற்சியாளர் பிரதீப் குமார், ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி, கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர் மால் தயால், தடகள பயிற்சியாளர் நாகபூரி ரமேஷ் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் வீரர் அஜின்க்யா ரஹானே, குத்துச்சண்டை வீரர் சிவதாப்பா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அபூர்வி சந்திலா, தொடர் ஓட்ட வீராங்கனை பலிதா பாபர், வில்வித்தை வீரர் ராஜத் சவ்கான், சவுமியாஜித் கோஷ், அமித்குமார், வினேஸ், விரேந்திர சிங், சுபத்ரா பால், ராணி, ரகுநாத், குருபிரித் சிங், சவ்ரவ் கோத்தாரி, மாற்றுத்திறனாளி தடகள வீரர் சந்திப் சிங் மான் உள்பட 15 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி வீரர் சில்வானாஸ், தடகள வீராங்கனை சாத்தி கீதா ஆகியோருக்கு தயான்சந்த் விருதுகள் வழங்கப்படுகிறது.

விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார். ராஜீவ் காந்தி ரத்னா விருது பெறுவோருக்கு ரூ.7.5 லட்சமும் துரோணாச்சாரியார், அர்ஜுனா விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சகாயராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ