Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்!

ரியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து விட்டது. அடுத்த 2020ம் ஆண்டுகான ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் ஆகிய நகரங்களுடன் போட்டி போட்டு வாய்ப்பை பெற்றது. டோக்கியோ நகரம்  60 சதவீத வாக்குகளைப் பெற்று வாய்ப்பை தட்டிச் சென்றது.

இதற்கு முன், கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது. அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுமே ஆசியாவில்தான் நடைபெறவுள்ளது. 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவிலும் குளிர் கால ஒலிம்பிக் தென்கொரியாவில் உள்ள பியான்சங்கில் 2018ம் ஆண்டும் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பெய்ஜிங்கிலும் நடைபெறுகின்றன.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோவில் புதிய ஸ்டேடியம் 1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால் பட்ஜெட் தொகையை விட பல மடங்கு செலவு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2019ம் ஆண்டுக்குள் புதிய ஸ்டேடியத்தின் கட்டுமானப்பணிகள் முடித்துவிடவேண்டுமென்பது ஜப்பானின் திட்டம்.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த சுமார் 3.5 பில்லியன் டாலர்கள் செலாவகும். இது போட்டியை நடத்துவதற்காக மட்டுமே. டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்காக 50 சதவீத வசதிகள் ஏற்கனவே உள்ளன. மீதி 50 சதவீத கட்டுமானப்பணிகளே மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.

கட்டிடங்கள், நகரின் போக்குவரத்து, கட்டமைப்புகளை பெருக்குவதற்கான விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் தனி.  

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேஸ்பால், சாஃப்ட் பால், ஸ்கேட்போர்டிங், சர்ஃபிங், கராத்தே போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்படுகின்றன. ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய விதிமுறைப்படி போட்டியை நடத்தும் நகரத்தின் விருப்பப்படி, சில விளையாட்டுக்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அதன்படி, டோக்கியோவில் 18 பிரிவுகளில் இந்த 5 விளையாட்டுகள்  இடம் பெறும். 474 வீரர்-வீராங்கனைகள் புதியதாக ஒலிம்பிக்கில் இடம் பெறுவார்கள். அதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் 33 விளையாட்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பார்கள். ரியோவில் 28 விளையாட்டுகள் இடம் பெற்றன. 10 ஆயிரத்து 500 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ரியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் மொத்தம் 41 பதக்கங்கள் வென்றது. இதற்கு முன் 38 பதக்கங்கள் வென்றதே ஜப்பானின் அதிபட்ச சாதனை. பேஸ்பால், சாஃப்ட்பால் விளையாட்டுகள் ஜப்பானில் மிகவும் பிரபலம். அதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் அதிக பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

டோக்கியோ நகர நேரப்படி மாலையில் நடத்தப்படும் விளையாட்டுகள் வட அமெரிக்க கண்டத்தில் அதிகாலை நேரம் ஆகும். அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உரிமம் பெற்றிருக்கும் என்.பி.சி. நிறுவனம் அமெரிக்க மக்கள் போட்டிகளை காணும் வகையில் போட்டிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டுமென கூறியுள்ளது.

டோக்கியோவை பொறுத்த வரை இரு பெண்கள்தான் ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போகின்றனர். ஒருவர் தமயா மருகா. இவரை அண்மையில் ஒலிம்பிக் போட்டிக்கான அமைச்சராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நியமித்தார்.

இன்னோருவர் டோக்கியோ நகர மேயர் யூரின்கோ கோய்கே. இவர் கடந்த வாரம்தான் டோக்கியோவின் புதிய மேயராக பொறுப்பேற்றார். '' ஒலிம்பிக்கில் ஜப்பான் வென்ற பதக்கங்களில் பாதியளவு  வீராங்கனைகள் வென்றது. குறிப்பாக மல்யுத்தத்தில் 4 தங்கப்பதக்கங்களை ஜப்பான் வீராங்கனைகள் வென்றனர். ஒலிம்பிக்கில் எங்கள் பெண்கள் அதிகளவில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.'' என்று கோய்கே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

'' மற்ற நாடுகளைப் பார்த்து அதேப்போலவே நாமும் ஒலிம்பிக் நடத்திக் காட்டக் கூடாது. அடுத்தவர்களை பார்த்து காப்பியடிக்காமல், போட்டியை நடத்தும் நாடுகள் தங்கள் நாட்டு கலாச்சர வழக்கப்படி ஒலிம்பிக்கை நிகழ்த்திக் காட்ட வேண்டும்'' என ஜப்பானுக்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close