Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''கோபி சார் பயிற்சிதான் பெஸ்ட்!''- துணை முதல்வருக்கு சிந்து பதில்!

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவிடம் சிந்து தோல்வியடைந்தார். எனினும் ரியோவில் இந்தியா வென்ற இரு பதக்கங்களில் சிந்து வெள்ளி வென்றார். சிந்துவின் தந்தை தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தை சேர்ந்தவர். தாயார் விஜயா, ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர். இதனால் சிந்துவின் வெற்றியை இரு மாநிலங்களும் கொண்டாடி வருகின்றன.

சிந்து வெள்ளி வென்றதையடுத்து ஹைதரபாத்தில் தெலுங்கானா அரசு சார்பில், நடந்த பாராட்டுவிழாவில் தெலுங்கானா டெபுடி முதல்வர் மக்மூத் அலி பேசுகையில், '' தற்போதைய சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் திறமைமிகுந்தவர்தான். இருந்தாலும் அடுத்த ஒலிம்பிக்கில் சிந்து தங்கம் வெல்லும் வகையில், நல்ல பயிற்சியாளரை அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கும்'' எனக் கூறியிருந்தார்.

ஆனால் சிந்து 10 வயதில் இருந்து கோபிசந்திடம் பயிற்சி பெற்று வருகிறார். ரியோ ஒலிம்பிக்கில் சிந்து பதக்கம் வெல்ல பின்புலமாக இருந்தவர் கோபிசந்த் என்றால் அது மிகையல்ல. புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது இந்திய பேட்மின்டன் வீரர் இவர் ஆவார். கடந்த 2008ம் ஆண்டு ஹைதராபாத்தில் பேட்மின்டன் அகாடமி ஆரம்பித்து ஏராளமான வீரர் - வீராங்கனைகளை கோபிசந்த உருவாக்கி வருகிறார். லண்டன் ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் வெண்கலம் வென்ற சாய்னா கூட கோபிசந்தின் மாணவிதான.

இந்தநிலையில்தான் தெலுங்கானா துணை முதல்வரின் பயிற்சியாளர் மாற்றம் குறித்த கருத்து சர்ச்சைக்கு வித்திட்டது. தற்போது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''என்னை பொறுத்த வரை கோபி சார்தான் பெஸ்ட். அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. இறுதியாட்டத்தில் கரோலினா சிறப்பாக விளையாடினார். அதனால் வெற்றி பெற்றார் '' என பதிலளித்துள்ளார்.

கோபிசந்த் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் பிறந்து தற்போது ஹைதராபாத்தில் செட்டில் ஆனவர். துணை முதல்வரின் கருத்து குறித்து கோபிசந்த் கூறுகையில்,'' துணை முதல்வர் கூறியதில் இருந்து பாசிடிவான விஷயத்தை மட்டுமே நான் பார்க்கிறேன். தெரியாமல் கூட அவர் பேசியிருக்கலாம் அல்லவா'' என முடித்துக் கொண்டார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இவருக்கு முன்னர், கர்ணம் மல்லேஸ்வரி, மேரி கோம், சாய்னா நேவால், சாக்ஷி மாலிக் ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ