Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ஒலிம்பிக் வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்..!


ரியோ ஒலிம்பிக் கலந்து கொண்டு நாடு திரும்பிய இந்திய தடகள வீராங்கனை ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் தலைநகர் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் ஒ.பி.ஜெய்ஷா பங்கு பெற்று 89வது இடத்தை பிடித்தார். பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விட்டு இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். அப்போது, அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜெய்ஷா மட்டும் அதற்கு ஒத்துழைக்காமல் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார். ஆனாலும், அவரிடம் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவக்குழுவினர் முடிவு செய்தனர். அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த மருத்துவக்குழுவினர், ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, ஜெய்ஷாவின் ரத்த மாதிரி சோதனை கடந்த 24ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி மார்பு நோய்கள் இன்ஸ்டிடியூட்டில் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது நேற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையில் இயக்குநர் சசிதார் பஜ்ஜி கூறுகையில், “நோய் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்த போதிலும், நாங்கள் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சையை தொடங்கியுள்ளோம். மருத்துவமனையில் சேருமாறு நாங்கள் அவரை கேட்டுக் கொண்டோம். அவர் மறுத்துவிட்டார்” என்று தெரிவித்துவிட்டனர்.

முன்னதாக, ஒலிம்பிக் மாரத்தான் போட்டியின் போது இந்தியா சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் எச்1 என்1 வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

ரியோவில் இருந்து திரும்பிய மற்றொரு இந்திய தடகள வீராங்கனை சுதாசிங்கிற்கு பன்றி காய்ச்சல் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

சகாயராஜ்

எடிட்டர் சாய்ஸ்