Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத்திற்கு வெள்ளி.இது லேட் ஆனா லேட்டஸ்ட்

 

இந்த மாதம் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில், தகுதிச் சுற்றிலேயே தோற்று ஏமாற்றம் அளித்தார், இந்தியாவின் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் . ஆனால், அவருக்கு ஆறுதலான ஒரு விஷயம் நடந்து இருக்கிறது.2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில், 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் யோகேஷ்வர். அதை தற்போது வெள்ளிப் பதக்கமாக மாற்றி அறிவிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

அப்போது நடந்த போட்டியில், வெள்ளிப்பதக்கத்தை ரஷ்யாவின் பெசிக் குடுகோவ் பெற்று இருந்தார்.ஆனால், அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது, தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

27 வயதான குடுகோவ், ஒரு கார் விபத்தில் 2013-ம் ஆண்டு இறந்து போனார்.இருந்தாலும், இந்த ஒலிம்பிக்கிற்கு முன்னர், மீண்டும் குடுகோவின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.இப்படி பழைய மாதிரிகளை சோதனை செய்வது, ஒலிம்பிக்கில் இயல்பான நடைமுறை

அதில், ஐந்து மல்யுத்த வீரர்கள், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.2008-ம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தானின் ஆர்தர் தைமாசோவின் பதக்கத்தையும், 2012-ம் ஆண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற ரஷ்யாவின் குடுகோவின் பதக்கத்தையும் பறிக்க இருக்கிறார்கள். உலக சாம்பியன்களான ஆர்தரும்,குடுகோவும் ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அதனால், 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத்திற்கு வெள்ளிப் பதக்கம் தர இருக்கிறார்கள். லண்டன் ஒலிம்பிக்கில், யோகேஷ்வர், குடுகோவிடம் தான் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெள்ளிப் பதக்கம் கிடைக்க இருப்பது, யோகேஷ்வர் தத்திற்கு பெரும் ஆறுதலாக இருக்கும் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ