Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரிசாகக் கிடைத்த காரை, பரிசளித்தார் சாக்சி மலிக்!

ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று முதன் முதலாக இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற செய்தவர் 23 வயதான சாக்‌ஷி மலிக். 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சாக்‌ஷி மலிக். இவரது தந்தை சுபீர் மலிக். தாயார் சுதேஷ் மலிக். இவரது தந்தை சுபீர் டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த சாக்‌ஷி மலிக் மல்யுத்த பயிற்சி வகுப்பில் சேரவே பல முட்டுக்கட்டைகள். அவற்றை எல்லாம் தாண்டி, 'இதில் என்னால் சாதிக்க முடியும். இதில்தான் நான் சாதிப்பேன்' என உறுதியாகவே இருந்தார். சாதாரண ஒரு கிராமத்திலிருந்து தனது 12 வது வயதில் மல்யுத்தம் பயிலத் தொடங்கியவர் இன்று உலகையே அந்த கிராமத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். தனது மல்யுத்த விளையாட்டு பயிற்சி தொடர்பான செலவினங்களுக்கு பல சிரமங்களை சந்தித்துள்ளார்.

சாதாரண பேருந்து நடத்துனரான அவரது தந்தை சுபீர் மலிக் தான் வாங்கும் சொற்ப வருமானத்திலேயே தனது குடும்பத்தையும் கவனித்து கொண்டு சாக்சியின் பயிற்சிக்கு தேவையான லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் செலவு செய்து சமாளித்து வந்திருக்கிறார். பல நேரங்களில் கடன் வாங்கியும், தன் மகளை பல போட்டிகளுக்கு அனுப்பியுள்ளார். இப்படி வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பலதரப்பட்ட கஷ்டங்களையும், வலிகளையும் தான் ஏற்றுக்கொண்டு சாக்‌ஷியை இன்று ஒலிம்பிக் வரை உற்சாகப்படுத்தி, உலகளவில் இந்தியாவிற்கு பெருமை தேடிதரும் அளவிற்கு தனது மகளை வளர்த்துள்ளார் சுபீர். இவ்வளவு கஷ்டங்களை தாங்கிக்கொண்டு தனது வளர்ச்சிக்கு உதவிய தந்தைக்கு சாக்‌ஷி செய்த கைமாறு என்ன தெரியுமா?

சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கம் பரிசாக அளித்த பி.எம்.டபிள்யூ உயர் ரக காரை தனது தந்தைக்கு பரிசாக அளித்திருக்கிறார். இதில் மற்றொரு சிறப்பு, எத்தனையோ இழப்புகளை சந்தித்துள்ள தனது தந்தைக்கு பி.எம்.டபிள்யு காரை கொடுத்து விட்டு, தந்தை பயன்படுத்தி வந்த சிறிய காரான ஃபோக்ஸ்வாகன் போலோவை எடுத்துக்கொண்டார் சாக்‌ஷி மலிக்.

-வே.கிருஷ்ணவேணி 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ