Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுவராஜிடம் உதவி கேட்கும் முகமது கைஃப்!

நாட்வெஸ்ட் கோப்பை இறுதி ஆட்டத்தை ஞாபகம் வைத்திருக்கும் அனைவருக்குமே இரண்டு விஷயங்கள் நியாபகம் இருக்கும், ஒன்று கங்குலி டி-ஷர்ட்டை கழற்றி சுற்றியது. இரண்டாவது கைஃப் , யுவராஜ் பார்ட்னர்ஷிப்.  அவர்களில் ஒருவரான முகமது கைஃப் நேற்று யுவராஜ் சிங்கிடம் உதவி கேட்டுள்ளார். 

ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கேள்வியை படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கேள்விக்கு பதில் தருமாறு யுவராஜிடம் உதவி கேட்டுள்ளார் கைஃப். அந்த புத்தகத்தில் யுவராஜ் பந்தை அடிக்கிறார். யுவராஜ் அடுத்த முனையை 3.2 செகண்டிலும், கைஃப் 1.8 செகண்டிலும் கடக்கிறார்கள். இவர்களுக்கான விகிதம் என்ன? என்பதுதான் கேள்வி.

இதற்கு பதல் சொல்லுங்கள் என்று கைஃப் யுவராஜிடம் கேட்க ட்விட் வைரலானது. பல நெட்டிசன்கள் போட்டி போட்டு ஃபார்முலாக்கள் எல்லாம் சொல்லி கலகலப்பான பதில்களை அளிக்க துவங்கியுள்ளனர். 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ