Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோப்பை வென்றது இந்தியா ஏ... மந்தீப், சஹல் அசத்தல்!

 

ஆஸ்திரேலியாவில் இந்தியா ஏ,ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ , தேசிய பெர்பானஸ் அணி ஆகிய அணிகளுக்கு இடையே தொடர் நடைபெற்று வந்தது. ஃபைனலுக்கு மனிஷ் பாண்டா தலைமையிலான இந்தியா ஏ அணியும், ஹேண்ட்ஸ்கோம்ப் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் முன்னேறியது. 


இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 55  ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.அதே போல், லீக் போட்டிகளில் இரண்டு முறையும், ஆஸ்திரிலேயாவிடம் தோற்றது இந்தியா. அதையும் கடந்து ஃபைனலுக்கு முன்னேறியது.


முதலில் பேட் செய்த இந்திய அணி, நான்கு விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது.மந்தீப் சிங் 95 ரன்களும், அணி கேப்டன் மனிஷ் பாண்டே 61 ரன்களும் எடுத்தனர்.  அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய சுழலில் சிக்கியது. ஸ்பின்னர்கள் 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினர். ஐபிஎல்லில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் அசத்தும் யோகேந்திர சஹல் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெடுக்கள் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மந்தீப் சிங் ஆட்ட நாயனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


இந்தத் தொடர் வெற்றியின் மூலம், ஹாட்ரிக் சாதனை படைத்தது இந்தியா. ஜூலை 2014,ஆகஸ்டு 2015 , 2016 என மூன்று முறையும் நம்ம பசங்க தான் ப்ரோ சாம்பியன்ஸ்  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ