Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலி தி பெஸ்ட், பூம்ராவுக்கு டிப்ஸ்..! பிரெட் லீ கலகல

ஆஸ்திரேலிய வீரர்கள் என்றாலே ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர் போனவர்களாக தான் இருப்பார்கள். ஓய்வு பெற்ற பிறகும் வசபாடுவதில் வல்லவர்கள் ஆஸி வீரர்கள். அப்படிப்பட்ட ஆஸியின் வேகப்புயல் விராட் கோலியை புகழ்ந்துள்ளார் என்றால் ஆச்சர்யம் தானே.  இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோலி தான் இன்றைய சூழலில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என பாராட்டுகிறார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ. 

கோலி இந்தியாவின் ரன் இயந்திரம். கடினமாக உழைத்து மிக விரைவில் ஒரு நல்ல நிலையை அடைந்த வீரர்கள் சிலரில் இவரும் ஒருவர். இப்போது தமிழ்நாட்டில், தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. தற்போது ருபி காஞ்சி வாரியர்ஸ்-இன் அறிவுரையாளராக இருக்கும் லீ. இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பூம்ராஹ் ஆகியோரை பற்றி பேசியுள்ளார்

மேலும் ஆஸி வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பற்றி கூறிய லீ ''அவர் ஒரு திறமையான வேகப்பந்து வீச்சாளர், மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். பந்தை ஸ்விங் செய்யும் திறன் மற்றும் நல்ல வேகமான பந்துகளை வீசுவதின் மூலம் 20-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருடைய யார்கர் பந்துகளும் அருமை. ஸ்டார்க்கின் இந்த சிறப்பான செயல்பாட்டை டெஸ்ட் போட்டிகளிலும் காண விரும்புகிறேன். பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளையும் ஒரு நாள் போட்டிகளையும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். ஆனால் இரண்டிற்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் பந்தின் வண்ணம் தான். 20-20 போட்டிகளில் யார்கர் எப்படியோ அதே மாதிரிதான் டெஸ்ட் போட்டிகளிலும். ஒரு நேர்த்தியான பந்து அனைத்து விதமான போட்டிகளிலும் ஒரு அடையாளமாக இருக்கும். அதனால், ஸ்டார்க் 20-20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் பந்து வீசுவது போலவே டெஸ்ட் போட்டிகளிலும் சுதந்திரமாக பந்து வீச வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் சிறப்பான அணியை கொண்டுள்ளது.  முன்பு, ஜாகிர் கான்,  இசாந்த் சர்மா. தற்போது முகமது சமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது பூம்ராஹ் தான். அவர் பந்துவீசும் விதம் வித்தியாசமானது. அவர் தன் முன் கையை சிறிது சரி செய்தால் மிகவும் வேகமான பந்துகளை அவரால் வீச முடியும் என்று நான் நினைக்கிறேன். இவரை போன்று பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். அவருடைய கை அசைவு ஜெப் தாம்சன்-ஐ போன்றே தனிமையானது. அவர் பந்துவீசும் முறை என்னை பெரிதும் ஈர்த்தது.” என்று அவர் இந்தியாவின் இளம் பந்துவீச்சாளரை பற்றி கூறினார்.

கோலிதான் தற்போதைய நிலையில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவர் விளையாடும் விதம் மற்றும் அவரது ஆக்ரோஷ‌மான ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தன் ஆக்ரோஷ‌த்தை தன் முகத்தில் வெளிப்படுத்துவார், தன் தலையில் அல்ல. அது, அவரை கட்டுபாட்டுடன் வைக்கும். அவர் மிகவும் உணர்ச்சி மிக்கவர் மற்றும் அணியை முன்னெடுத்துச் செல்பவர். அவருடைய உத்தி நம்பமுடியாதது. எந்த நிலையிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். நான் சச்சின், லாரா ஆகியோருக்கும் பந்துவீசி இருக்கிறேன்..கோலிக்கும் வீசி இருக்கிறேன். ஆனால் நான் பந்துவீசிய போது இருந்த கோலி இப்போது இல்லை. கோலி தன்னை பல வடிவங்களிலும் மேம்படுத்தி வைத்துள்ளார் என பாராட்டினார். 

லீ கமென்டரி மற்றும் அறிவுரையாளர் ஆகியவற்றின் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தமிழ்நாடு பிரிமியர் லீக் உள்நாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்று கருதுகிறார்கள். இது பற்று அவர் கூறியது,” என் முதல் வேலை வீரர்கள் செயல்பாட்டை கவனித்து அவர்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின் நான் கிளென் மெக்ராத், டென்னிஸ் லில்லீ போன்றவர்களிடம் கற்றுக்கொண்டதை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். பந்துவீசும் பார்வையில் நான் அவர்களுக்கு பல உத்திகளை கற்றுக்கொடுக்க முடியும். நான் என் வீரர்களுக்கு அவர்கள் ஆசைகளை வெளிப்படுத்த முழு சுதந்திரம் அளிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

- முரளி.சு
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ