Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சாம்பியன்ஸ் தொடரில் இருந்து விலகுவோம்!' ஐ.சி.சி.யை மிரட்டும் பி.சி.சி.ஐ.

ர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி குழு சந்திப்பு துபாயில் சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பி.சி.சி.ஐ அழைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காமல் போக வாய்ப்பு அமைந்துள்ளது.

என்ன தான் நடந்தது?

2014ம் ஆண்டு  ஸ்ரீநிவாசன்  ஐ.சி.சி தலைவராக இருந்த போது "தி பிக் த்ரீ"(The Big Three) என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் கவுன்சில்களுக்கு ஐ.சி.சியினால் ஈட்டப்படும் வருவாயில் பெரிய பங்கு கொடுக்கப்படும். ஆனால் இந்த வருடம்  சஷான்க் மனோகர் ஐ.சி.சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டம் பின் வாங்கப்பட்டது. ஸ்ரீனிவாசனின் தலைமையில் 2015-2023 காலக்கட்டத்தில் ஈட்டப்படும் ஒளிபரப்பு வருவாயில் 22% பி.சி.சி.ஐக்கு சேர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மனோகர் தலைமையில் இது பதினைந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ இடையே ஒரு கசப்பான உறவே நிலவி வந்தது. நிதிக் குழு சந்திப்பிலிருந்து நீக்கப்பட்டது பி.சி.சி.ஐ சேர்ந்த அதிகாரிகளை மிகவும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.  

மேலும், இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்காக பி.சி.சி.ஐக்கு நாற்பத்து ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கு நூற்று முப்பத்து ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை இருபத்து எட்டு நாட்கள் நடைபெறும் பெரிய தொடர். ஆனால் சாம்பியன்ஸ் ட்ராப்பி 19 நாட்கள் மட்டுமே நடக்கும் சிறிய தொடர். சிறிய தொடருக்கு மூன்று மடங்கு நிதி ஒதுக்கியதை அடுத்து பி.சி.சி.ஐ கேள்வி எழுப்பியுள்ளது.

இதைப் பற்றி பேசிய பி.சி.சி.ஐ செயலாளர் அஜய் ஸ்ரிகே , "பி.சி.சி.ஐ தான் நிறைய நிதி முடிவுகளை எடுக்கின்றது. எங்களை நிதிக் குழுவிலிருந்து நீக்கியது, எங்களை அவமானப்படுத்தும் செயலாகும். 'நீங்கள் இதற்கு சரியான பதில் கூறாவிட்டால், இந்தியாவில் கிரிக்கெட் பாதுகாக்கப்படுவதற்காக நாங்கள் உலக அரங்கில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்' என்று ஐ.சி.சியிடம் கூறப் போகிறோம். நாங்கள் இதற்காக சாம்பியன்ஸ் ட்ராப்பியில் பங்கேற்காமல் கூடப் போகலாம். அது நடக்காமல் இருப்பது நல்லது. ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்பும் இருக்கின்றது." என்றார்.

"ஐ.சி.சி ஒரு அடிமைத்தனத்தை திணிக்க நினைக்கின்றது. 'தி பிக் த்ரீ' திட்டம் மட்டும் அல்லாது அனைத்து விஷயங்களிலும் எங்களை தள்ளி வைக்கிறார்கள். ஐ.சி.சியின் வருவாயில் எழுபது சதவீதம் பி.சி.சி.ஐயிடமிருந்து தான் வருகிறது. எங்களை எப்படி நிதிக் குழுவிலிருந்து நீக்கலாம்? ஐ.சி.சி என்ன ராபின் ஹூட் ஆ? எங்களிடம் திருடி மற்றவர்களுக்கு கொடுக்க? எங்களால் 900 கோடி இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.", என்று கூறியுள்ளார் ஒரு பி.சி.சி.ஐ அதிகாரி.

- ம. சக்கர ராஜன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ