Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய அணியில் இந்த முறையும் இவருக்கு இடமில்லை! #INDvsNZ

செப்டம்பர் 22ம் தேதி தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம் பின் வருமாறு! 

விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், புஜாரா, முரளி விஜய், ரோஹித் ஷர்மா, அஸ்வின், சஹா(விக்கெட் கீப்பர்) , ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷவர் குமார், ஷிகர் தவான், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ்.

மும்பையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே கலந்து கொண்டனர். அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் கம்பீருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. துலிப் கோப்பை போட்டிகளில் கம்பீர்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ