Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என் ஒலிம்பிக் கனவு கலைய ரெஃப்ரிதான் காரணம்!' - சதீஷ் சிவலிங்கத்தின் விரக்தி #VikatanExclusive

 

சதீஷ் சிவலிங்கம், வேலூரை சேர்ந்த வெயிட்லிஃப்டர்.  ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீரர். கிளாஸ்கோவில் 2014ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் கோல்டு அடித்த இளைஞர்.

‘அப்பா முன்னாள் ராணுவ வீரர். நேஷனல் லெவல்லவெயிட்லிஃப்டிங்ல மெடல் வின்னர் . அவரைத் தாண்டி என்ன இன்வண்ல்லடெர்னேஷனல் லெவல்ல பாக்கனும்னு ஆசைப்பட்டார். இதைச் சொல்லி சொல்லியே என்னை வளர்த்தார். காலப்போக்குல எனக்கும் அது பிடிச்சுப் போச்சு. 16 வயசுல இருந்து இந்த ஸ்போர்ட்ஸ்தான் எனக்கு வாழ்க்கை’ என சொல்லும் சதீஷின்வயது 24. 

‘எங்க ஊரு சத்துவாச்சாரில வெயிட்லிஃப்டிங்ல ஃபேமஸ்.  4 இன்ஸ்டிட்யூட்ல மொத்தம் 300 பேருக்கு மேல புரஃபொஷனல் வெயிட்லிஃப்டர்ஸ் இருக்காங்க. இதுல பத்து பேர் இன்டர்நேசனல் பிளையர்ஸ். நான் வித்தை கத்துகிட்ட அட்லஸ் உடற்பயிற்சிக் கூடத்துல அர்ஜுனா விருது ஜெயிச்ச மூனு பேர் இருக்காங்க. அதுல நானும் ஒருத்தன்.

 அப்பா,அப்புறம் 2000ல சிட்னி ஒலிம்பிக்ல கலந்துகிட்ட பி.முத்து இவங்கதான் என் ஆரம்ப கால பயிற்சியாளர்கள். அவங்க டிரெய்னிங்ல நேசனல் லெவல்ல ஜெயிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் பஞ்சாப் பாட்டியாலாவுல இந்திய கேம்ப்ல சேந்த பிறகு, நேஷனல் டீம் கோச் விஜய் சர்மா சார்ஜ் எடுத்துகிட்டார். அவர் கோச்சிங்லதான் காமன்வெல்த்ல தங்கம் வின் பண்ணேன். ரியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றுலயும் ஜெயிச்சேன்.

காமன்வெல்த் வின் பண்ண பிறகு ஒலிம்பிக் போறதுதான் என் டார்கெட். அதுக்கு ஏகப்பட்ட தகுதிச்சுற்று. நிறைய அட்டன் பண்ணியாச்சு. ஆனா, செலக்டக் ஆகல. அமெரிக்காவுல வேர்ல்ட் சாம்பியன்ஷிப் நடந்தப்ப முதுகுவலி. விட்டுட்டேன். ஒரு வருஷம் ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னாங்க. ரெஸ்ட் எடுத்தா  ஒலிம்பிக் போக முடியாதுன்னு, அந்த வலியோட ஒலிம்பிக் ட்ரெயல்ஸ் (தகுதிச்சுற்று) போனேன். கடைசியா நேஷனல் ரெக்கார்டு பண்ணி ஒலிம்பிக் வாய்ப்பை பிடிச்சுட்டேன். 

ஒலிம்பிக் வில்லேஜ் போனதும் முதல்ல கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு. ரெண்டு மூனு ஈவன்ட்ஸ் பாத்ததும் நம்பிக்கை வந்துருச்சு. எல்லாம் நல்லாதான் இருக்கு. இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைக்கும்னு நினைச்சேன். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுல கடைசி முயற்சியா 186 கிலோவ தூக்க ட்ரை பண்ணேன். 

திடீர்னு ரெஃப்ரி ‘நோ லிஃப்ட்னு’ சொல்லிட்டார். என்னைப் பொறுத்தவரை பெர்ஃபெக்டா செயல்பட்ட மாதிரிதான் இருந்துச்சு. அவர் ஏன் அப்படி சொன்னாருன்னு புரியலை. அது  மட்டும் சரியா அமைஞ்சிருந்தா, 2 பொசிஷன் மேல வந்திருப்பேன். நேஷனல் ரிக்கார்டு. பதக்கம் ஜெயிக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும். ரெஃப்ரியோட தப்பான முடிவால என்னோட ஒலிம்பிக் பதக்க கனவு கலைஞ்சிடுச்சு. பத்து நாளைக்கு முன்னாடியே ரியோ டீ ஜெனீரோ போயிட்டோம். ஆனா, நம்ம சாப்பாடு அங்க கிடைக்கலை. கிரில் சிக்கன், சிப்ஸ், பீட்சா, காய்கறிகள்தான் குடுத்தாங்க. எனக்கு பீட்சா பிடிக்காது. டிரெயின் பண்ணிட்டு அதுக்கேத்த சாப்பிட்டாதானே எனர்ஜி கிடைக்கும்? சாப்பாடு சரியில்லைன்னு கம்ப்ளெய்ன்ட் பண்ணா, இன்னிக்கு சரியாயிடும், நாளைக்கு சரியாயிடும்னு சமாளிச்சுட்டாங்க. எங்க மேட்ச் நடக்குற அன்னிக்கின்னு பாத்து செம மழை, குளிர்.  மேட்ச் 8 மணிக்கு. நாங்க ஆறு மணிக்கு ரூம்ல இருந்து கிளம்பி, பஸ் தெரியாம திணறி கடைசியா ஒலிம்பிக் வில்லேஜ் போயி சேந்தோம். வெதர் கூடஎனக்கு சப்போர்ட் பண்ணல. 

மெடல் வின் பண்ணலேயே தவிர, முதல் ஒலிம்பிக் அனுபவம் சுவாரஸ்யமா இருந்துச்சு. உசைன் போல்ட், மைக்கேல் பெல்ப்ஸ், ரஃபேல் நடால் இவங்கள எல்லாம் நேர்ல பாத்தது சந்தோஷமா இருந்துச்சு. சானியா மிர்ஸா, அபினவ் பிந்த்ரா எல்லாம் சகஜமா பேசுனாங்க. தீபா கர்மகர் ஏற்கனவே அறிமுகம். இப்ப அவங்க நல்ல ஃபிரண்ட்.

இன்னும் முதுகுல கொஞ்சம் வலி இருக்கு. குணமானதும் 2018 காமன்வெல்த் கேம்ஸுக்கு ரெடி ஆகணும். கரெக்டா பிளான் பண்ணி, ஸ்பான்சரும் கிடைச்சா டோக்கியோ ஒலிம்பிக்ல பதக்கம் ஜெயிக்கலாம். ஆனா, மத்த ஸ்போர்ட்ஸ் மாதிரி வெயிட்லிஃப்டிங்கை யாருமே கண்டுக்க மாட்டேன்றாங்க. அரசும் அலட்சியமா இருக்கு. ஸ்பான்சர்ஸும் வர்றதில்லை. 

ஒலிம்பிக் போறதுக்கு முன்னாடி அரசும் சரி, சங்கமும் சரி ஒரு ரெஸ்பான்சும் பண்ணல. இதுவே மெடல் வின் பண்ணி இருந்தா தூக்கி வச்சு கொண்டாடி இருப்பாங்க. நாங்க யாருன்னே தெரியாம, போயிட்டு வந்துட்டோம் என விரக்தியாக சிரிக்கிறார் சதீஷ்.

-தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ