Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலி... கோழிக் கறி... டயட் குரு!

விராட் கோலி கிரிகெட்டில் எந்தளவுக்கு தன் பங்களிப்பை தருகிறரோ அதே அளவுக்கு ஃபிட்னெஸ் பிரியரும் கூட. அவரது இந்த ஃபிட்னெஸ், ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம்…… எப்படி அவரது பேட்டிங் திறனும் பெர்சனல் மனோ திடமும் கிரிக்கெட் ஆர்வலர்களை ஈர்த்ததோ அப்படி!!!! தற்போது அவரது ஃபிட்னெஸ் சிலரை ஈர்க்கவும் செய்து உள்ளது. இந்த ஃபிட்னெஸ் விராட் பத்தின சில விஷயங்களை இதோ!!!

ஃபிட்னெஸ் பிரியர் கோலி:

உண்மையில் முன்பெல்லாம் விராட் மிகப்பெரிய சிக்கன் பிரியர். சிறு வயது சிக்கன் ப்ரியர் இப்போதெலாம் அப்படி இல்லை. உணவு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ப்ரோட்டின் சத்துகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். கொழுப்பு சத்து அதிகம் இல்லாத அசைவ உணவுகள், வேகவைத்த காய்கறி வகைகள் ஆகியவைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.

ஃபிட்னெஸ் தான் கோலி ஃபர்ஸ்ட்:

கோலியை பார்த்து உடனிருக்கும் வீரர்களும் கூட டயட் ப்ரியர்கள் ஆகியிருக்கிறார்களாம்.  நியூசிலாந்து டெஸ்ட் தொடர்  நடந்து வரும் நிலையில், பி.சி.சி.ஐ. தங்களுக்கு அங்கு தேவையானவை குறித்து முன்பே அனுப்ப வேண்டும் அவ்வகையில் அவர்கள் அனுப்பிய மெயிலில், முக்கியமாக கூறியிருப்பது டயட் ஃபெசிலிடி தேவைகள் பத்தித்தானாம். இதுகுறித்து பி.சி.சி.ஐ.யின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆபிசர் ஒருவர் கூறும்போது, இப்பொழுதெல்லாம் வீரர்கள் யாவரும் சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பாக இருப்பதாக கூறுகிறார். கோலியை இது குறித்து கூறும் போது,  “ஒரு கிரிக்கெட்டருக்கு ஃபிட்னெஸ் தான் ரொம்ப முக்கியம். ஏனெனில், சில நேரங்களில் ஒரு நாள் முழுவதுமோ அல்லது இரண்டு மூன்று நாட்களோ தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் எங்களுக்கு உருவாகும். அப்போழுதெல்லாம் இந்த டயட் தான் எங்கள் ஸ்டேமினாவிற்கு பூஸ்ட்டாக இருந்து கஷ்டமான நிலையிலும் ஆட்டத்தில் கவனமாக இருந்து புத்தியை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கிறது” என்கிறார் தடாலடியாக.

‘என் ரோல் மாடல் கோலி’

அணியின் ஓப்பனர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் தனக்கு இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல் எல்லாமே கோலி தான் என்கிறார். மேலும் கூறும்போது, “எங்களை போன்ற அணியின் புது வீரர்களுக்கு கோலி தான் தி பெஸ்ட் எடுத்துக்காட்டு. யோசித்து பாருங்கள்…… நீங்கள் பார்த்து பார்த்து வியக்கும் ஒரு மனிதர்!!! உங்களின் இன்ஸ்பிரேஷன்…… உங்கள் பக்கத்தில் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்!!!! கோலி எங்களோடு ட்ரெஸ்ஸிங்க் ரூமில் இருக்கும் போது அதே அளவு உற்சாகம் தான் எங்களுக்கும்!!!!!. கோலியின் கட்டுப்பாடுகள், ஒழுக்கம், வேலை நேர்த்தி, கிரிக்கெட்டில் அவர் காண்பிக்கும் பெர்ஃபெக்ஷ்ன், இவை எல்லாத்துக்கும் மேலாக அவரது ஃபிட்னஸ் சீக்ரெட்………….இதை எல்லாம் ஒவ்வொரு நாளும் பார்த்து நாங்கள் ஆச்சர்யப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். பெர்சனலாக என்னுடைய ரோல் மாடல் அவர்தான்” என்கிறார் சந்தோஷம் திளைக்க.

கோலி எப்பவுமே ‘நோ காம்பரமைஸ்’:

ராகுலின் இந்த ஆச்சர்ய ஸ்பீச்சை கேட்ட பி.சி.சி.ஐ. கூறும் போது, “ராகுலின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை. கோலி அவ்வளவு பெர்ஃபக்ஷனிஸ்ட்.  அசைவ பிரியர்களுக்கு கிரில்ட் சிக்கன், சைவ பிரியர்களுக்கு பன்னீர்……………என அரேஞ்மன்ட்ஸ் செய்து தருவது சாத்தியக் கூறு. ஆனால், கோலி விஷயத்தில், ப்ளென்டர் வேண்டும் என்பார். ப்ளென்டர் என்பது கலப்பான் ஆகும். இன்றைய சூழலினில் ரெடிமேடாக பாக்கெட்டிலேயே ஜூஸ் வகைகள் கிடைக்கிறது. ஆனால், அதிலெல்லாம் சர்க்கரை அளவும் கார்போஹைட்ரேட் அளவும் அதிகமாக இருக்கும் என்று கூறி, அவாய்ட் செய்து விடுவார் கோலி. ஜூஸில் கூட ஃபெர்ஷ் ஜூஸ், ஹெல்தி ஜூஸ் தான் வேண்டுமென்பதில் கோஹ்லி ரொம்ப ஸ்டிரிக்ட். நோ காம்பரமைஸ்”

ஃபிட்னெஸ் தந்த பூஸ்ட்:

கோலியைப் பார்த்து வளரும் இன்றைய இளம் வீரர்கள் ஒரு விஷயத்தில் சரியாக இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டின் தலை சிறந்த டீமாக இருக்க வேண்டுமென முற்பட்டுவிட்டார்கள். அதற்காக நாட்டின் சுவையான உணவுவகைகளையும் தியாகம் செய்து விட்டனர். கண்முன்னே ஒரு வீரர் ஃபிட்னெஸ்ஸிற்காக எதையும் எவரையும் (உலகின் தலை சிறந்த வீரரானாலும்) தூக்கி எறியும் தைரியம் பெற்றவராக உள்ளார் (கோலியே தான்!!!). அவரிடம் இருந்து இதை கூடவா கற்காமல் இருப்பார்கள்!!!! ஃபிட்னெஸ் தந்த உற்சாகத்தில் நம் வீரர்களை உடலாலும் ஆற்றலாலும் செம ஃபிட் தான். ஆக, இப்போது கோலி ஃபிட்னெஸ் டீச்சரும் கூட….. எங்கள் சார்பில் இந்த குருவிற்கு வாழ்த்துக்கள்!!!

- ஜெ. நிவேதா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ