Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''விளையாடக் கூட சேர்க்க மாட்டார்கள்!'' சச்சினை நெகிழ வைத்த மாரியப்பன்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட பாராலிம்பிக் வீரர்களை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

ரியோவில் அண்மையில் முடிவடைந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மும்பையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பதக்கம் வென்ற நான்கு வீரர்கள் மற்றும் இதற்கு முன்னர் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை சச்சின் வழங்கினார்.

விழாவில் பங்கேற்ற சச்சின் பாராலிம்பிக் வீரர்களை வெகுவாக பாராட்டினார். அவர் பேசுகையில், '' எனது வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி ஸ்பெஷலான தருணம். இந்த விழாவுக்கு அழைத்து என்னை கவுரவப்படுத்தியதற்கு நன்றி. இந்தியாவை பெருமைப்படுத்திய இந்த நான்கு வீரர்கள் குறித்தும் நானும் பெருமிதம் கொள்கிறேன். உலகம் இவர்களை மாற்றுத்திளாளிகள் என்று அழைக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன்கள் அசாதாரணமானவர்கள்.  ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்குள்ளும் ஏராளமான சோதனைகள் துயரங்கள் இருக்கும். ஆனால், இவர்கள் சந்தித்தது போல பிற விளையாட்டு வீரர்கள் சந்தித்திருக்க முடியாது.  தடைகளைத்தாண்டி சாதித்திருக்கும் இவர்களைப் உதாரணமாகக் கொண்டு இன்னும் பல வீரர்கள் உருவாகி வர வேண்டும் '' என பேசினார்.

விழாவில் குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்,  ''பாராலிம்பிக் வீரர்கள் என்று அழைக்கப்படும் போது நான் வருத்தமடைகிறேன். இந்த போட்டியின் பெயர் 'ஒலிம்பிக்ஸ் பாராலிம்பிக்ஸ் என்று மாற்றப்பட வேண்டும் '' என கோரிக்கை விடுத்தார்.

ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், ''எனக்கு சச்சின்தான் ரோல் மாடல். இப்போது என்னால் அவரை நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி '' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வீரர் மாரியப்பன் பேச்சு அனைவரையும் நெகிழ வைத்தது. மாரியப்பன் பேசுகையில், ''எதையாவது சாதிக்க வேண்டும். எனது அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற வெறி எனக்குள் இருந்து கொண்டேதான் இருந்தது. நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்கள் என்னை விளையாடக் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அப்போதுதான் நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும் போது, உயரம் தாண்ட ஆரம்பித்தேன் .பின்னர் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் வெற்றி கிடைத்தது. ரியோவில் பதக்கம் வென்ற பிறகு,அங்கு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைப் பார்த்து எனது கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேசத்திற்காக சாதித்த பெருமிதம் எனக்குள் ஏற்பட்டது'' என்றார்.

மாரியப்பனின் பேச்சு சச்சின் உள்ளிட்ட கூட்டத்தினரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நிகழ்ச்சி முடிவில் பாராலிம்பிக் சாம்பியன்களுடன் சச்சின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

-எம்.குமரேசன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ