Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏமாற்றிய சென்னை...சொல்லி அடித்த டில்லி! #ISLupdates

 

பிரேசிலைச் சேர்ந்த மார்செலோ முதல் பாதியிலேயே இரண்டு கோல்கள் அடித்து அசத்த, சென்னையின் எப்.சி.யை அதன் சொந்த மண்ணில் 3-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தியது டில்லி டைனமோஸ் அணி.

 

சென்னை நேரு மைதானத்தில்  வியாழக்கிழமை நடந்த இந்தியன் சூப்பர் லீக்  தொடரின் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. மற்றும் டில்லி டைனமோஸ் அணிகள் மோதின. இந்த சீசனின் முதல் போட்டி என்பதால் மைதானத்தில் 21, 587 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

 

லெஃப்ட் பேக்கில் மோகன்ராஜ், ரைட் பேக்கில் வாடூ, சென்டர் டிஃபன்ஸில் பெர்னார்டு மெண்டி மற்றும் மார்க்கீ வீரர் ஜான் ரிசீ என சென்னை அணியின் பின்களம் வலுவாக இருந்தது. ஜேஜே, டூடூ ஸ்ட்ரைக்கர்களாக களமிறங்கினர்.

 

21-வது நிமிடத்தில் ஜெயஷ் ராணேவுக்கு ஓபன் நெட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் டில்லி முன்கள வீரருடன் சென்னை கோல்கீப்பர் டுவைன் கெர் மோதலில் ஈடுபட்டதால், டில்லி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பிரேசிலைச் சேர்ந்த மார்செலோ பெரீரா நேர்த்தியாக இடதுகால் மூலம் சிரமமே இன்றி கோல் அடித்தார். இதனால் டில்லி 1 - 0 என முன்னிலை பெற்றது. சென்னை ரசிகர்கள் விக்கித்து நின்றனர்.

 

அடுத்த சிறிது நேரத்தில் சென்னை பதிலடி கொடுத்தது.  32-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜெஜே பொனால்டி கொடுத்த பாஸை நட்சத்திர வீரர் டூடு டில்லி டிஃபண்டருக்கு போக்கு காட்டி கோல் அடித்தார். ஆட்டம் 1 - 1 என சமநிலை அடைந்தது. பதிலடி கொடுத்த உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால், அந்த ஆர்ப்பரிப்பு அடங்குவதற்குள் டில்லி அணி மீண்டும் ஒரு கோல் அடித்து சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது.

 

ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் நடுகளத்தில் இருந்து ரிச்சர்ட் கட்ஸே கொடுத்த பாஸை, அதே வேகத்தில் நொடியும் தாமதிக்காது கோல் கீப்பரை ஏமாற்றி  கோல் அடித்தார் மார்செலோ. இது அவரது இரண்டாவது கோல். இது முழுக்க முழுக்க சென்னையின் சென்ட்ரல் டிஃபன்டர்கள் செய்த தவறால் நேர்ந்த கோல். இருப்பினும் அடுத்த நிமிடமே மென்டி மீண்டும் ஒரு தவறு செய்ய, டில்லி அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை சென்னை கோல் கீப்பர் உஷாராகி அதைத் தடுத்து விட்டார்.

 

முதல் பாதியில் அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்கியதால் டில்லியின் கையே ஓங்கி இருந்தது. இதனால், இடைவேளையின்போது டில்லி 2 -  1 என முன்னிலை பெற்றது.

 

இரண்டாவது பாதியில் சென்னை அணி தாக்குதல் ஆட்டத்தை துரிதப்படுத்தி இருந்து. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டில்லி வீரர் அனஸ் காயமடைந்து வெளியேற,அவருக்குப் பதிலாக கிம் கிமா களம்புகுந்தார். 51-வது நிமிடத்தில் சென்னை வீரர் ரபேல் அகஸ்டோ டில்லி வீரர் மெமோவை கீழே தள்ளி விட்டதால் மஞ்சள் அட்டை பெற்றார்.

 

டில்லி அணி ஏற்கெனவே முன்னிலை பெற்றிருந்ததால், கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சென்னை அணி. ஆனால் அதற்கான வாய்ப்பே அமையவில்லை. அதற்கு நேர்மாறாக 84-வது நிமிடத்தில் லெப்ட் விங் திசையில் இருந்து வந்த கிராஸை அலட்டாமல் தலையில் முட்டி கோல் அடித்தார் டில்லி வீரர் . இதனால் டில்லி 3- 1 என முன்னிலை பெற்றது. சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மடராஸி மட்டுமல்லாது மைதானத்தில் இருந்து ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர்.

 

ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்தபோது ரைட் விங் பகுதியில் இருந்து டூடூ நேர்த்தியாக கொடுத்த பாஸை, கலெக்ட் செய்து கோல் அடிக்க ஆளில்லாததால் சென்னை அணியின் கோல் வாய்ப்பு நழுவியது. இரண்டாவது பாதியில் கடைசி வரை சென்னையால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், சொந்த மண்ணில் முதல் தோல்வியைத் தழுவியது. ஆட்ட நேர முடிவில் 3- 1 என்ற கோல் கணக்கில் டில்லி வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close